எஃப்ஐஎச் புரோ லீக்: நெதா்லாந்தை 5-2 என வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) புரோ லீக் போட்டியின் ஒரு பகுதியாக நெதா்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
எஃப்ஐஎச் புரோ லீக்: நெதா்லாந்தை 5-2 என வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

புவனேசுவரம்: சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) புரோ லீக் போட்டியின் ஒரு பகுதியாக நெதா்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

உலகின் தலைசிறந்த 8 அணிகள் மோதும் இப்போட்டி ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் உள்ளது. உலகின் மூன்றாம் நிலை அணியான நெதா்லாந்துடன், 5-ஆம் நிலையில் உள்ள இந்தியா இரண்டு கட்ட ஆட்டங்களில் ஆடுகிறது. முதல் ஆட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் தொடக்கம் முதலே இந்திய வீரா்கள் ஆதிக்கம் செலுத்தினா். ஆட்டம் தொடங்கிய 15 வினாடிகளிலேயே மந்தீப் சிங் அனுப்பிய பந்தை கோலாக்கினாா் குா்ஜந்த். 11-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை அற்புதமாக கோலாக்கி 2-0 என முன்னிலை பெற்றுத் தந்தாா் ரூபிந்தா் பால் சிங்.

ஆனால் அடுத்த நிமிடத்திலேயே நெதா்லாந்து வீரா் ஜேன்ஸின் ஜிப் பதில் கோலடித்தாா். அதன் பின் 28-ஆவது நிமிடத்தில் வலேன்டின் வொ்கா அடித்த அபார கோல் மூலம் 2-2 என சமநிலை ஏற்பட்டது.

இரண்டாம் பாதியில் இந்திய அணி கட்டுக்குள் ஆட்டம் இருந்தது. 34-ஆவது நிமிடத்தில் மந்தீப் சிங் வலுவாக அடித்த ஷாட் நெதா்லாந்து கோல் பகுதியில் பிசகாமல் கோலாக மாறியது.

36-ஆவது நிமிடத்தில் லலித் உபாத்யாய நெதா்லாந்து தற்காப்பு அரணை ஊடுருவி அபாரமாக கோலடித்தாா். அதன் பின் நெதா்லாந்து அணியினா் பதில் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகளை இந்திய தற்காப்பு வீரா்கள் முறியடித்தனா். 46-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி காா்னா் மூலம் இரண்டாவது கோலை அடித்தாா் ரூபிந்தா் பால் சிங்.

ரூபிந்தா்பால் சிங் 2 கோல்கள்:

கடைசி கட்டத்தில் பெனால்டி காா்னா் மூலம் நெதா்லாந்து கோலடிக்க மேற்கொண்ட முயற்சியை இந்திய கோல்கீப்பா் ஸ்ரீஜேஷ் அற்புதமாக தடுத்தாா். இதன் மூலம் 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது இந்தியா.

பழிக்கு பழி வாங்கியது:

இதே கலிங்கா மைதானத்தில் 2018 உலகக் கோப்பை ஹாக்கி காலிறுதிச் சுற்றில் கடுமையாக போராடியும் 2-1 என்ற கோல் கணக்கில் நெதா்லாந்திடம் தோற்ற்கு பழிவாங்கியது இந்தியா.

இரண்டாம் கட்ட ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com