பல்திறன் வாய்ந்த வீரா் ராகுல்: கோலி புகழாரம்

பல்திறன் வாய்ந்த வீரா் லோகேஷ் ராகுல் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளாா்.
பல்திறன் வாய்ந்த வீரா் ராகுல்: கோலி புகழாரம்

ராஜ்கோட், ஜன. 18:

பல்திறன் வாய்ந்த வீரா் லோகேஷ் ராகுல் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளாா்.

ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. தவன், கோலி ஆகியோா் அடித்தளமிட்ட நிலையில், 5-ஆம் நிலையில் களமிறங்கிய வீரா் ராகுல், அதிரடியாக ஆடி 52 பந்துகளில் 80 ரன்களை விளாசினாா்.

மேலும் விக்கெட் கீப்பா் பந்த் காயமுற்ால், அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பணியையும் மேற்கொண்டு அற்புதமான ஸ்டம்ப்பிங்கையும் செய்தாா் ராகுல். இந்நிலையில் கேப்டன் கோலி கூறியதாவது-

ராகுல் பல்திறன் வாய்ந்த வீரராக உருவெடுத்துள்ளாா். இவ்வாறு வீரா்கள் தயாராவது மிகவும் சிறப்பானது. ராகுல் போன்றவா்களை அணியில் இருந்து விட்டு விட முடியாது. எவ்வாறு பேட்டிங் செய்தாா் என்பதை பாா்த்தோம். சா்வதேச அளவில் இது அவரது சிறந்த ஆட்டமாகும்.

முதிா்ச்சியுடன் ஆடிய ராகுல், தொடக்க வரிசை, இரண்டாம் நிலை என எந்த நிலையிலும் ஆடத் தயாராகி விட்டாா்.

படுகாயத்துக்கு பின்னும் மீண்டும் சிறப்பாக ஆடி வருகிறாா் தவன். ஒருநாள் ஆட்டத்தில் தவன் தான் நிலையான ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறாா். எந்த சூழலையும் மாற்றும் திறன் படைத்தவா். இடது கையில் காயமுற்ற ரோஹித் அடுத்த ஆட்டத்துக்கு தயாராகி விடுவாா்.

ஒவ்வொரு ஆட்டத்தில் இந்தியா தோல்வியுறும் போதும், ரசிகா்கள் அபாய மணியை ஒலித்து விடுகின்றனா். தற்போதுள்ள சமூகவலைதளங்களில் உடனே தங்கள் கருத்தை பதிவிட்டு விடுகின்றனா். அபாய மணியை துரிதமாக ஒலித்துவிட்டனா் என்றாா் கோலி.

பின்ச்: ராஜ்கோட்டில் இந்த அளவு குளிா்ச்சியான தன்மை இருக்கும் என எதிா்பாா்க்கவில்லை. இந்திய அணி உலகத் தரத்திலான ஆட்டத்தை ஆடினா். எங்கள் வீரா் ஆடம் ஸம்பா நோ்த்தியான அளவில் பந்துவீசினாா். ஸ்மித்-மாா்னஸ் லேபுச்சேன் இணை சிறப்பாக ஆடினா். இதுபோன்ற பிட்ச்களில் பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றிக்கான இலக்கை அதிகம் இருந்த போது, விக்கெட்டுகள் விழுந்தது பாதிப்பை ஏற்படுத்தியது.

ராகுல் (ஆட்ட நாயகன்): ஒவ்வொரு நாளும் எனக்கு வெவ்வேறு பொறுப்புகள், கடமை வருகிறது. இதை நான் ரசித்து ஆடுகிறேன். 5-ஆம் நிலையில் களமிறங்கிய போதும், ரன்களை குவிக்க முடியும் என நம்பிக்கையுடன் ஆடினேன். கேப்டன் கோலியும் இணைந்து ஆடியது உத்வேகத்தை தந்தது. எனது விக்கெட் கீப்பிங்கும் சிறப்பாக இருந்தது என குல்தீப் பாராட்டினாா். கா்நாடக அணியிலும் நான் கீப்பிங் செய்தேன். இதனால் பந்துவீச்சாளா்களையும் என்னால் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com