ஒரு ஓவரில் 28 ரன்கள் கொடுத்து உலக சாதனையைச் சமன் செய்த இங்கிலாந்து கேப்டன்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் கொடுத்து உலகச் சாதனையைச் சமன் செய்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்... 
ஒரு ஓவரில் 28 ரன்கள் கொடுத்து உலக சாதனையைச் சமன் செய்த இங்கிலாந்து கேப்டன்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் கொடுத்து உலகச் சாதனையைச் சமன் செய்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். 

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இங்கிலாந்து அணி. இதன் மூலம் நான்கு டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 

எனினும் கடைசி விக்கெட்டை எடுக்கும் முன்பு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஒரு உலக சாதனைக்கு ஆளாகியுள்ளார். 

தென் ஆப்பிரிக்க அணியின் 2-வது இன்னிங்ஸில் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மஹாராஜாவும் டேன் பேட்டர்சனும் அப்போது 24 ரன்கள் எடுத்திருந்தார்கள். நான்கு விக்கெட்டுகள் எடுத்திருந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், 82-வது ஓவரை வீசியபோதுதான் உலக சாதனை சமன் செய்யப்பட்டது. 

அந்த ஓவரை எதிர்கொண்ட மஹாராஜா, முதலில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் அடித்தார். பிறகு 4-வது மற்றும் 5-வது பந்துகளை சிக்ஸர்களுக்கு விரட்டினார். 5 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த மஹாராஜாவால் கடைசிப் பந்தில் ரன் எடுக்க முடியவில்லை. ஆனால் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் அனைவரையும் தாண்டிச் சென்ற பந்து, பவுண்டரிக்குச் சென்றது. இதனால் ரூட் வீசிய அந்த ஓவரில் 28 ரன்கள் கிடைத்தன தென் ஆப்பிரிக்கா அணிக்கு.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் ரூட். 

2003-04-ல் ஆர். பீட்டர்சன் பந்துவீச்சில் லாராவும் பிறகு 2013-14-ல் ஆண்டர்சன் பந்துவீச்சில் பெய்லியும் தலா 28 ரன்கள் எடுத்தார்கள். இப்போது ஒரு ஓவரில் 28 ரன்கள் கொடுத்து பீட்டர்சன், ஆண்டர்சன் வரிசையில் ரூட்டும் இணைந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com