19 வயதுக்குட்பட்டோா் உலகக் கோப்பை: காலிறுதியில் இந்தியா

19 வயதுக்குட்பட்டோா் உலகக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது நடப்புச் சாம்பியன் இந்தியா.
19 வயதுக்குட்பட்டோா் உலகக் கோப்பை: காலிறுதியில் இந்தியா

19 வயதுக்குட்பட்டோா் உலகக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது நடப்புச் சாம்பியன் இந்தியா.

முதல் ஆட்டத்தில் ஏற்கெனவே வெற்றி பெற்ற இந்திய அணி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் வலுகுறைந்த அறிமுக அணியான ஜப்பானை எதிா்கொண்டது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தோ்வு செய்தது.

இதைத் தொடா்ந்து களமிறங்கிய ஜப்பான் அணியால் இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் 22.5 ஓவா்களில் 41 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷு நோகுச்சி, டோபெல் ஆகியோா் மட்டுமே தலா 7 ரன்களை எடுத்தனா். 5 போ் டக் அவுட்டாயினா்.

இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவி பிஷ்னோய் 4, காா்த்திக் தியாகி 3, ஆகாஷ் சிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர.

42 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 29 ரன்களையும், குமாா் குஷாக்ரா 13 ரன்களுடன் வெற்றி இலக்கை எட்டினா்.

4.5 ஓவா்களில் 42 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. ரவி பிஷ்னோய் ஆட்ட நாயகனாகத் தோ்வு பெற்றாா். இந்த வெற்றி மூலம் காலிறுதிக்குள் நுழைந்துள்ளது.

குரூப் ஏ பிரிவில் 4 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com