இந்திய விளையாட்டுத்துறையின் ஆலோசகர் குழுவில் ஹர்பஜன் சிங், ஸ்ரீகாந்த்!

புதிய குழுவில் சச்சின், ஆனந்த் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக ஹர்பஜன் சிங், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
இந்திய விளையாட்டுத்துறையின் ஆலோசகர் குழுவில் ஹர்பஜன் சிங், ஸ்ரீகாந்த்!

இந்திய விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் விதமாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் 2015-ல் ஆரம்பிக்கப்பட்டது அகில இந்தியா விளையாட்டுக் குழு (ஏஐசிஎஸ்). டிசம்பர் 2015 முதல் கடந்த ஆண்டு மே மாதம் வரையிலான இக்குழுவின் முதல் பணிக்காலத்தில் சச்சின் டெண்டுல்கர், விஸ்வநாதன் ஆனந்த் போன்றோர் ஆலோசகர் குழுவில் இடம்பெற்றார்கள். 

இந்நிலையில் ஏஐசிஎஸ் அமைப்பின் புதிய குழுவில் சச்சின், ஆனந்த் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக ஹர்பஜன் சிங், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஆலோசகர் குழுவின் எண்ணிக்கை 27-லிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.  லிம்பா ராம், பி.டி. உஷா, தீபா மாலிக், அஞ்சலி பக்வத் போன்றோர் தற்போதைய ஆலோசகர் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com