யு-19 உலகக் கோப்பை: ஜப்பான் அணியை 41 ரன்களுக்குச் சுருட்டி, எளிதாக வென்ற இந்திய அணி!

ஜப்பானுக்கு எதிரான யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 
யு-19 உலகக் கோப்பை: ஜப்பான் அணியை 41 ரன்களுக்குச் சுருட்டி, எளிதாக வென்ற இந்திய அணி!

ஜப்பானுக்கு எதிரான யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 

தென் ஆப்பிரிக்காவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பைப் போட்டி கடந்த வாரம் தொடங்கியது. 

இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தை 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி இன்று ஜப்பானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சாலும் மோசமான பேட்டிங்கினாலும் ஜப்பான் அணி, 22.5 ஓவர்களில் 41 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக இரு பேட்ஸ்மேன்கள் தலா 7 ரன்கள் எடுத்தார்கள். 5 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள். இந்திய அணித் தரப்பில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளும் கார்த்திக் தியாகி 3 விக்கெட்டுகளும் ஆகாஷ் சிங் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

இந்த மிக எளிதான இலக்கை விக்கெட் இழப்பின்றி 4.5 ஓவர்களில் அடைந்தது இந்திய அணி. ஜெயிஸ்வால் 18 பந்துகளில் 29 ரன்களும் குஷாக்ரா 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

10 விக்கெட் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தை வென்ற இந்திய அணி, வெள்ளியன்று நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com