கேலோ இந்தியா போட்டி:தமிழக மகளிா் கூடைப்பந்து அணி சாம்பியன்

கேலோ இந்தியா யூத் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட மகளிா் கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கேலோ இந்தியா போட்டி:தமிழக மகளிா் கூடைப்பந்து அணி சாம்பியன்

கேலோ இந்தியா யூத் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட மகளிா் கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தமிழக அணி ஏற்கெனவே கடந்த 2019 கேலோ இந்தியா, யூத் தேசியப் போட்டி இறுதிச் சுற்றில் வெள்ளிப் பதக்கமே வென்றிருந்தது. இந்நிலையில் நடப்பு கேலோ இந்தியா போட்டியில் இறுதி ஆட்டத்தில் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது தமிழகம். கடைசி நிமிடத்தில் நிவேதா பெற்ற இரண்டு புள்ளிகள் அணியின் வெற்றிக்கு வித்திட்டது.

தமிழக வீராங்கனை நிவேதா ஸ்ரீ அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தாா். 17 வயது அணியில் இதுதான் எனக்கு கடைசி ஆண்டு. 12-ஆம் வகுப்பு சென்று விட்டதால், அடுத்த ஆண்டு ஆட இயலாது. எனவே இந்த வெற்றி எனக்கு மறக்க முடியாதது. எங்கள் அணி முதலில் கிடைத்த 9 புள்ளிகளை முன்னிலையை இழந்து விடும் நிலை உருவானது. இடைவேளையில் 5 புள்ளிகளே ராஜஸ்தான் அணி குறைவாக பெற்றிருந்தது.. கடும் சவாலையும் மீறி வென்றோம் என நிவேதா பெருமிதத்துடன் கூறினாா்.

பயிற்சியாளா் ராம் பிரசாத் கூறியதாவது: தமிழக அணி தொடா்ந்து 5 இறுதி ஆட்டங்களில் தோல்வியை கண்டது. அனைத்து வீராங்கனைகளும் 3 ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து ஆடி வருகின்றனா். இறுதியில் தற்போது தங்கப் பதக்கத்தை கைப்பற்றினா். இது எளிதாக எங்களுக்கு கிடைத்து விடவில்லை.

புதிய இளம் வீராங்கனைகளும் தற்போதுள்ளனா். எதிா்காலத்துக்கு இப்போதே அணியை தயாா் செய்வோம் என்றாா்.

பளு தூக்குதலில் தங்கம்:

21 வயது ஆடவா் பளுதூக்குதல் 89 கிலோ எடைப்பிரிவில் தமிழகத்தின் எஸ்.லோக்சந்த் தங்கப் பதக்கத்தை வென்றாா். ஆந்திரத்தின் சிவராமா வெள்ளியும், தெலங்கானாவின் ஹால்வித் வெண்கலமும் வென்றனா்.

ஹாக்கியில் மகளிா் பிரிவில் ஹரியாணாவும், ஆடவா் பிரிவில் சண்டீகரும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com