பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தால் நியூஸிலாந்து ஏ அணியை எளிதாக வீழ்த்திய இந்திய ஏ அணி!

நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய ஏ அணி, முதல் அதிகாரபூர்வமற்ற ஒருநாள் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

லின்கால்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஒரு நியூஸிலாந்து ஏ அணி பேட்ஸ்மேனும் அரை சதமெடுக்க முடியாத அளவுக்கு இந்திய ஏ அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. ரவிந்திரா 49 ரன்களும் கேப்டன் புரூஸ் 47 ரன்களும் எடுத்தார்கள். சிராஜ் 3 விக்கெட்டுகளும் கலீல் அஹமது, அக்‌ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

இதன்பிறகு பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடியதால் 29.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இந்திய ஏ அணி. பிரித்வி ஷா 35 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்களும் சஞ்சு சாம்சன் 21 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்களும் எடுத்து இந்திய அணி எளிதில் வெற்றி பெற உதவினார்கள். சூர்யகுமார் யாதவும் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com