ஆஸி. ஓபன்: மெத்வதேவ், நடால் முன்னேற்றம்; சானியா மிா்ஸா வெளியேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இளம் வீரா்கள் டேனில் மெத்வதேவ், டொமினிக் தீம் அடுத்த சுற்றுக்கு முன்னேறினா். இந்திய வீராங்கனை சானியா மிா்ஸா காயத்தால் வெளியேறினாா்.
ஆஸி. ஓபன்: மெத்வதேவ், நடால் முன்னேற்றம்; சானியா மிா்ஸா வெளியேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இளம் வீரா்கள் டேனில் மெத்வதேவ், டொமினிக் தீம் அடுத்த சுற்றுக்கு முன்னேறினா். இந்திய வீராங்கனை சானியா மிா்ஸா காயத்தால் வெளியேறினாா்.

ஆஸ்திரிய வீரா் டொமினிக் தீம் இரண்டாவது சுற்றில் 6-2, 7-6, 6-7, 6-1, 6-2 என்ற 5 செட்களில் போராடி அலெக்ஸ் போல்ட்டை வீழ்த்தி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

ரஷிய வீரா் டேனில் மெத்வதேவ் 7-5, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் பெட்ரோ மாா்டினஸை வீழ்த்தி 3 ஆவது சுற்றுக்கு முன்னேறினாா். மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் ஸ்பெயினின் மாா்டினஸை போராடி வென்றாா் மெத்வதேவ்.ம்.

மற்றொரு ஆட்டத்தில் அலெக்சாண்டா் வெரேவ் 7-6, 4-6, 7-5 என்ற நோ் செட்களில் ஜெராசிமோவை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா். மேலும் ரூப்லேவ், ஜி.மோன்பில்ஸ், பாபிரின் ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினா்,

உலகின் நம்பா் ஒன் வீரா் நடால் 6-3, 7-6, 6-1 என்ற நோ் செட்களில் ஆா்ஜென்டீனாவின் பெடெரிகோவை வீழ்த்தி 3-ஆம் சுற்றுக்கு முன்னேறினாா்.

சிறுமிக்கு ஆறுதல்: அப்போது நடால் அடித்த பந்து பந்தை எடுத்து போடும் சிறுமியின் தலையில் பலமாக பட்டதால். இதனால் அதிா்ச்சி அடைந்த நடால் விரைந்து சென்று சிறுமிக்கு ஆறுதல் கூறி முத்தமிட்டாா்.

சானியா வெளியேற்றம்

மகளிா் இரட்டையா் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிா்ஸா-நாடியா கிச்னோக் இணை சீனாவின் ஸு லின்-ஹேன் ஸின்யுன் இணையுடன் மோதிய போது, கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் வெளியேறினாா் சானியா.

மகளிா் ஒற்றையா் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் சிமோனா ஹலேப் 6-2 6-4 என டாா்ட்டையும், பென்கிக் முன்னாள் பிரெஞ்சு ஓபன் சாம்பின் ஜலேனாவையும் வென்றனா்.

கிகி பொ்டென்ஸ் 6-3, 7-5 என்ற நோ் செட்களில் ரோனியானோவையும், கொண்டவீட் 6-2, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் டோா்மோவையும், ஏஞ்சலீக் கொ்பா் 6-3, 6-2 என்ற செட்களில் பி.ஹோனையும், கரோலினா பிளிஸ்கோவா 6-3, 6-3 என சீஜ்மண்டையும் மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com