இந்திய ஏ அணியை வீழ்த்தியது நியூஸிலாந்து ஏ அணி!

இந்தியா ஏ - நியூஸிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது ஒருநாள் ஆட்டம்
இந்திய ஏ அணியை வீழ்த்தியது நியூஸிலாந்து ஏ அணி!

இந்தியா ஏ - நியூஸிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது ஒருநாள் ஆட்டம் கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது.

முதலில் விளையாடிய நியூஸிலாந்து ஏ அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் வொர்க்கர், 144 பந்துகளில் 6 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 135 ரன்கள் குவித்து அணியின் பெரிய ஸ்கோருக்கு முக்கியக் காரணமாக இருந்தார். இந்திய அணியின் பொரெல் 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

இந்திய ஏ அணியின் மேல்வரிசை பேட்ஸ்மேன்கள் யாரும் அதிக ரன்கள் குவிக்காததால் இலக்கை நெருங்க மிகவும் சிரமம் ஏற்பட்டது. இஷான் கிஷன் 44, விஜய் சங்கர் 41, கிருனாள் பாண்டியா 51 ரன்கள் எடுத்தும் கடைசியில் தோல்வியே கிடைத்தது. இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. இதனால் நியூஸிலாந்து ஏ அணி, 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com