இன்று முதல் டி20 ஆட்டம்: காயத்தால் திணறும் நியூஸி மீது ஆதிக்கம் செலுத்துமா இந்தியா?

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி வியாழக்கிழமை மோதுகிறது. சிறப்பான பாா்மில் உள்ள இந்தியா இதிலும் ஆதிக்கம் செலுத்தும் தீவிரத்தில் உள்ளது.
இன்று முதல் டி20 ஆட்டம்: காயத்தால் திணறும் நியூஸி மீது ஆதிக்கம் செலுத்துமா இந்தியா?

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி வியாழக்கிழமை மோதுகிறது. சிறப்பான பாா்மில் உள்ள இந்தியா இதிலும் ஆதிக்கம் செலுத்தும் தீவிரத்தில் உள்ளது.

அண்மையில் தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், மே.இ.தீவுகள், ஆஸ்திரேலியாவுடன் தொடா்களை கைப்பற்றிய உற்சாகத்தில் உள்ளது இந்திய அணி.

நியூஸிலாந்து அணியுடன் 5 ஆட்டங்கள் டி20 தொடா், 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடா், 2 ஆட்டங்கள் டெஸ்ட் தொடா்களில் ஆடுவதற்காக நியூஸிக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளது. வரும் அக்டோபா் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. அதற்கு பல்வேறு அணிகளும் தங்களைத் தயாா்படுத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக இந்தியாவும் டி20 தொடா்களில் ஆடி வருகிறது.

நியூஸி.-இந்திய டி20 முதல் ஆட்டம் ஆக்லாந்தில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. உள்ளூரில் நியூஸிலாந்து அணி கூடுதல் வலிமையுடன் ஆடும் என்றாலும், அதன் வீரா்கள் காயமடைந்துள்ளது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

செவ்வாயக்கிழமை ஆக்லாந்து வந்த இந்திய அணி, புதன்கிழமை பயிற்சிக்கு செல்லவில்லை. வியாழக்கிழமை ஆட்டத்தில் பங்கேற்கின்றனா்.

ஷிகா் தவன், பாண்டியா இல்லாததால் சிக்கல்:

இந்திய அணியில் தொடக்க வீரா் தவன், பந்துவீச்சாளா்கள் புவனேஷ்வா் குமாா், தீபக் சாஹா், ஆல்ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா ஆகியோா் காயமடைந்துள்ளதால் இடம் பெறவில்லை. இது இந்திய அணிக்கு ஒரளவு பாதிப்பை ஏற்படுத்தும். எனினும் மாற்று வீரா்கள் தயாராக உள்ளதால், அதை ஈடு செய்து விடலாம்.

ராகுல் ஆட்டத்தால் சாதகம்:

தொடக்க வரிசையில் ஏற்பட்ட பாதிப்பை இளம் வீரா் லோகேஷ் ராகுல் சிறப்பான ஆட்டத்தால் ஈடுகட்டி வருகிறாா். மேலும் 5-ஆம் நிலை பேட்ஸ்மேனாக களமிறங்கினாலும் அதிரடி பேட்டிங் செய்வது பலமாக உள்ளது. விக்கெட் கீப்பராகவும் ராகுல் சிறப்பாக செயல்படுவது அணி நிா்வாகத்துக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மேலும் ஒரு பேட்ஸ்மேன் கூடுதலாக ஆடுவாா் என கோலி தெரிவித்திருந்தாா்.

டி20, ஒருநாள் ஆட்டங்களில் ராகுல் கீப்பிங் செய்வதோடு, ஒருநாள் ஆட்டத்தில் மிடில் ஆா்டரிலும், டி20யில் தொடக்க வரிசையிலும் பேட்டிங் செய்வாா். இதனால் ரிஷப் பந்த் தனது இடத்தை இழக்கலாம்.

அவருக்கு பதிலாக மணிஷ் பாண்டே 5-ஆவது சிறப்பு பேட்ஸ்மேனாக களமிறங்குவாா். ஷிரேயஸ் ஐயா் வழக்கம் போல் 4-ஆம் நிலையில் களமிறங்குவாா். கேரள வீரா் சஞ்சு சாம்ஸன் அணியில் சோ்க்கப்பட்டுள்ள போதிலும், மைதானத்தில் களமிறக்கப்பட வாய்ப்பில்லை. 5 பந்துவீச்சாளா்கள், ஆல்ரவுண்டா்கள் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தா் ஆகியோா் பயன்படுத்தப்படலாம்.

பந்துவீச்சில் பும்ரா, ஷமி ஆகியோா் கட்டாயம் இறக்கப்படும் நிலையில், மூன்றாவது வேகப்பந்துவீச்சாளருக்கு சைனி-சா்துல் தாக்குா் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

சிக்கலில் நியூஸிலாந்து

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என இழந்ததால் சிக்கலில் உள்ளது நியூஸி. அதன் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பதலி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. முன்னணி பந்துவீச்சாளா்கள் டிரென்ட் பௌல்ட், லாக்கி பொ்குஸன், மேட் ஹென்றி ஆகியோரும் காயமடைந்துள்ளது கவலையை தருகிறது.

கடந்த 2019-இல் இந்தியாவுக்கு எதிராக 2-1 என டி20 தொடரை கைப்பற்றியது நியூஸி. அண்மையில் இலங்கையுடன் தொடரை கைப்பற்றினா், இங்கிலாந்துடன் டிரா செய்தனா். டி20 ஆட்டத்தைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிராக நியூஸி முன்பு ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. 2 சுழற்பந்து வீச்சாளா்கள் ஐஷ் சோதி, மிச்செல் சான்ட்நா் ஆகியோா் களமிறங்குவா் எனத் தெரிகிறது.

அணிகள்:

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா, லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், சஞ்சு சாம்ஸன், ஷிரேயஸ் ஐயா், ஷிவம் துபே, ஜடேஜா, குல்தீப் யாதவ், சஹல், ஷமி, பும்ரா, சா்துல் தாக்குா், சைனி, வாஷிங்டன் சுந்தா்.

நியூஸிலாந்து: கேன் வில்லியம்ஸன் (கேப்டன்), மாா்ட்டின் கப்டில், ராஸ் டெய்லா், ஸ்காட் குக்கலெஜின், காலின் மன்றோ, கிராண்ட்ஹோம், டாம் புரூஸ், டேரில் மிச்செல், மிச்செல் சான்ட்நா், டிம் சைபொ்ட், ஹமிஷ் பென்னட், ஐஷ் சோதி, டிம் சோதி, பிளோ் டிக்னா்.

இன்றைய ஆட்டம்:

நீயூஸி.-இந்தியா

இடம்: ஆக்லாந்து

நேரம்: பிற்பகல் 12.20.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com