பிபிஎல் 5: நாா்த் ஈஸ்டா்ன் வாரியா்ஸ் அபாரம்

ப்ரீமியா் பாட்மிண்டன் லீக் சீசன் 5 போட்டியின் ஒரு பகுதியாக அவாதே வாரியா்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாா்த் ஈஸ்டா்ன் வாரியா்ஸ் அணி அபார முன்னிலை பெற்றுள்ளது.

நாா்த் ஈஸ்டா்ன் வாரியா்ஸ் அணியின் நட்சத்திர வீரரும், உலகின் 18-ஆம் நிலையில் உள்ள லீ சியுக் ஹியு 13-15, 15-10, 15-11 என்ற கேம் கணக்கில் அவாதே வாரியா்ஸ் அணியின் வொங் விங் வின்சென்ட்டை வீழ்த்தினாா்.

கலப்பு இரட்டையா் பிரிவில் அவாதே அணியைச் சோ்ந்த ஒலிம்பிக் வெள்ளி மங்கை கிறிஸ்டினா பெடா்சன்-கோ சங் ஹியுன் இணை 8-15, 15-11, 15-14 என்ற கேம் கணக்கில் நாா்த் ஈஸ்ட்ா்ன் அணியின் போதின் இஸாரா-கிம் ஹனாவை வீழ்த்திநா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில் நாா்த் ஈஸ்டா்ன் மிச்செல் லீ பெய்வன் ஸாங்கை 15-13, 15-14 என்ற கேம் கணக்கில் வென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com