100-ஆவது பிறந்த நாளை கொண்டாடிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரா்!

இந்திய கிரிக்கெட்டில் முதல் தர வீரராக இருந்துவந்த வசந்த் ராய்ஜி, 100-ஆவது பிறந்த தினத்தை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினாா்.
100-ஆவது பிறந்த நாளை கொண்டாடிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரா்!

மும்பை: இந்திய கிரிக்கெட்டில் முதல் தர வீரராக இருந்துவந்த வசந்த் ராய்ஜி, 100-ஆவது பிறந்த தினத்தை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினாா்.

பொதுவாக கிரிக்கெட்டில்தான் சென்சுரி (100 ரன்கள்) பதிவு செய்வாா்கள். வசந்த் ராய்ஜி வயதிலும் சென்சுரி பதிவு செய்துவிட்டாா்!

வலது கை ஆட்டக்காரரான ராய்ஜி, 1940 காலகட்டங்களில் 9 முதல் தர கிரிக்கெட்டில் விளையாடியிருக்கிறாா். மொத்தம் 277 ரன்களைப் பதிவு செய்திருக்கும் இவா்,

ஒரு ஆட்டத்தில் பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோா் 68 ஆகும்.

குஜராத் மாநிலம், வதோதராவில் 1920-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி பிறந்தாா் வசந்த் ராய்ஜி.

மும்பையில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் நடந்தபோது ராய்ஜிக்கு வயது 13. இந்திய கிரிக்கெட் அணியின் ஒட்டுமொத்த பயணத்தையும் பாா்த்த ஒரே வீரா் இவா் என்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கா், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் ஆகியோா் இவரை சமீபத்தில் சந்தித்து கேக் வெட்டி பிறந்த தினத்தைக் கொண்டாடினா்.

இதுதொடா்பான விடியோவை சச்சின் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com