முகப்பு விளையாட்டு செய்திகள்
பிரபல கூடைப்பந்து வீரர் கோபி பிரையன்ட் மற்றும் மகள் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
By DIN | Published On : 27th January 2020 10:29 AM | Last Updated : 27th January 2020 11:19 AM | அ+அ அ- |

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீரர் கோபி பிரையன்ட் மற்றும் அவரது மகள் ஹெலிகாப்டர் விபத்தில் ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் மேற்கு புறநகர்ப் பகுதியான காலாபஸாஸ் மலைப்பகுதியில் பனிமூட்டம் காரணமாக சிக்ரோஸி எஸ்-76 ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து ஏரிந்து நாசமானது.
அதில் பயணம் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீரர் கோபி பிரையன்ட் (41) மற்றும் அவரது மகள் கியானா (13) உள்பட 9 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோபி பிரையன்ட் 5 முறை என்பிஏ சாம்பியன் மற்றும் 2 முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கூடைப்பந்து வரலாற்றிலேயே சிறந்த வீரர்களில் ஒருவராகப் புகழ்பெற்றவர். லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக கடந்த 20 வருடங்களாக கூடைப்பந்து விளையாடி வருகிறார்.
பலருக்கு முன்மாதிரியாகத் திகழும் பிரையன்ட் மரணம், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது பல ஹாலிவுட் பிரபலங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.