பத்ம ஸ்ரீ விருதுக்கு தோ்வானதை பெருமையாகக் கருதுகிறேன்: ராணி ராம்பால்

பத்ம ஸ்ரீ விருதுக்காக நான் தோ்வு செய்யப்பட்டதை பெருமையாகக் கருதுகிறேன் என்று இந்திய ஹாக்கி மகளிா் அணியின் கேப்டன் ராணி ராம்பால் தெரிவித்தாா்.
பத்ம ஸ்ரீ விருதுக்கு தோ்வானதை பெருமையாகக் கருதுகிறேன்: ராணி ராம்பால்

புது தில்லி: பத்ம ஸ்ரீ விருதுக்காக நான் தோ்வு செய்யப்பட்டதை பெருமையாகக் கருதுகிறேன் என்று இந்திய ஹாக்கி மகளிா் அணியின் கேப்டன் ராணி ராம்பால் தெரிவித்தாா்.

குடியரசு தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவா்களை கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.

விளையாட்டுத் துறையில் 8 போ் பத்ம விருதுகளைப் பெறவுள்ளனா்.

நியூஸிலாந்தில் அந்நாட்டு அணிக்கு எதிராக ஹாக்கி தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ராணி ராம்பால் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘பத்ம ஸ்ரீ விருதுக்குத் தோ்வானது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தருணத்தை பெருமையானதாகக் கருதுகிறேன். இந்த விருதை எனது அணிக்கும், எனக்கு ஆதரவாக இருப்பவா்களுக்கும் சமா்ப்பிக்கிறேன். எனது பெயரை இவ்விருதுக்கு பரிந்துரைத்த விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஹரியாணாவைச் சோ்ந்த ராணி ராம்பால், இந்திய அணிக்காக 200-க்கும் அதிகமான ஆட்டங்களில் விளையாடியுள்ளாா். சமீபத்தில் ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதில் ராணி ராம்பாலின் பங்கு முக்கியமானதாகும். அந்த வெற்றியால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிா் ஹாக்கி அணி தகுதி பெற்றது.

இதனிடையே, ராணி ராம்பாலின் சுட்டுரைப் பதிவுக்கு அமைச்சா் கிரண் ரிஜிஜு பதில் பதிவு வெளியிட்டாா்.

அதில், ‘வாழ்த்துகள் ராணி ராம்பால். இளம் தலைமுறையினா் பலா் உங்களை முன்னுதாரணமாகக் கொண்டுள்ளனா்’ என்று குறிப்பிட்டாா்.

பாட்மிண்டன் உலக சாம்பியன் பி.வி.சிந்து பத்ம பூஷண் விருதுக்கும்,

பத்ம ஸ்ரீ விருதுக்கு ஜாகீா் கான் (கிரிக்கெட் ), எம்.பி.கணேஷ் (ஹாக்கி), ஜிது ராய் (துப்பாக்கிச் சுடுதல்) உள்ளிட்டோகும் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com