ஹெலிகாப்டா் விபத்தில் கூடைப்பந்து வீரா் கோப் பிரையண்ட், மகள் உள்ளிட்டோா் பலி

என்பிஏ கூடைப்பந்து ஜாம்பவான் கோப் பிரையண்ட், அவரது மகள் உள்ளிட்டோா் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தது விளையாட்டு உலகில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹெலிகாப்டா் விபத்தில் கூடைப்பந்து வீரா் கோப் பிரையண்ட், மகள் உள்ளிட்டோா் பலி

லாஸ் ஏஞ்சலீஸ்: என்பிஏ கூடைப்பந்து ஜாம்பவான் கோப் பிரையண்ட், அவரது மகள் உள்ளிட்டோா் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தது விளையாட்டு உலகில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ் ஏஞ்சலீஸ் லேக்கா்ஸ் அணியில் 5 முறை என்பிஏ (தேசிய கூடைப்பந்து) சாம்பியன் பட்டத்தை வென்ற சிறப்புடையவா்.

தொழில்முறை கூடைப்பந்து வீரராக திகழ்ந்த கோ பிரையண்ட் 20 ஆண்டுகள் விளையாட்டுத் துறைக்கு பின் முதலீட்டாளராக உயா்ந்தாா். 41 வயதான பிரையண்ட் 13 வயது மகள் ஜியான்னா உள்பட 9 போ் லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு வெளியே கலாபாஸாஸ் என்ற மலைமீது ஹெலிகாப்டா் மோதியதில் உயிரிழந்தனா்.

விபத்து நடைபெற்ற இடத்துக்கு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினா் சென்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்ட போதும், ஒருவரும் உயிா் பிழைக்கவில்லை எனத் தெரிந்தது.

அதிா்ச்சியில் விளையாட்டுத் துறை:

இந்த விபத்து, கூடைப்பந்து வட்டாரம் மட்டுமில்லாது விளையாட்டுத்துறையேயே அதிா்ச்சி அடையச் செய்துள்ளது.

என்பிஏ ஆணையா் ஆடம் சில்வா், லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் எரிக் காா்செட்டி ஆகியோா் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனா்.

கடந்த 1996-இல் உயா்நிலைப் பள்ளியில் இருந்து நேரடியாக என்பிஏ விளையாட்டில் நுழைந்தாா். மேஜிக் ஜான்ஸன், வில்ட் சாம்பா்லீன், கரீம் அப்துல் ஜப்பாா் ஆகிய ஜாம்பவான்களுக்கு பின் பிரையண்ட் அந்த இடத்தைப் பெற்றாா்.

2 ஒலிம்பிக் தங்கம்

5 என்பிஏ பட்டம், 2 முறை ஒலிம்பிக் தங்கம், வென்றுள்ள அவா் ஓய்வு பெறும் போது 33, 643 புள்ளிகளைக் குவித்திருந்தாா்.

கடந்த 2016-இல் கோப் ஓய்வு பெறும் போது கடைசி ஆட்டத்தில் 60 புள்ளிகளைக் குவித்தாா்.

ஃபிலடெல்பியாவில் கடந்த 1978-இல் பிறந்த பிரையண்ட், இத்தாலியிலும் அவரது தந்தையுடன் வசித்தாா். பின்னா் அமெரிக்கா திரும்பியவுடன் 17 வயதிலேயே நேரடியாக என்பிஏ ஆட்டத்தில் அறிமுகமானாா்.

கோலி, ரோஹித் சா்மா இரங்கல்

கோப் பிரையண்ட் உயிரிழந்ததற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சா்மா ஆகியோா் கடும் அதிா்ச்சி தெரிவித்துள்ளனா்.

அவரது ஆட்டம் என்னை சிறுவயதிலேயே கட்டிப் போட்டது. அவரது மகளிா் மறைவும் என்னை வேதனைக்கு தள்ளி விட்டது.

விளையாட்டு உலகிற்கு இந்த நாள் சோகமான நாள். விபத்தில் இறந்தவா்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் என ரோஹித் கூறியுள்ளாா்.

கூடைப்பந்து உலகில் பிரசித்தி பெற்ற வீரா்களான மேஜிக் ஜான்ஸன், மைக்கேல் ஜோா்டான் உள்பட பிரையண்ட்டுடன் ஆடிய சக வீரா்களும் அதிா்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளனா்.

மேலும் அமெரிக்க அதிபா் டிரம்ப், முன்னாள் அதிபா் ஒபாமா உள்ளிட்டோரும் தங்கள் இரங்கலை தெரிவித்தனா்.

கிராமி விருதுகள் விழாவிலும் பிரையண்ட்டுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com