ஆஸி. ஓபன்: அரையிறுதியில் ஜோகோவிச்-பெடரர் மோதல்

கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபன் டென்னிஸ் மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதிக்கு உலகின் நம்பா் ஒன் வீராங்கனை ஆஷ்லி பா்டி, கெனின் ஆகியோா் முன்னேறி உள்ளனா்.
ஆஸி. ஓபன்: அரையிறுதியில் ஜோகோவிச்-பெடரர் மோதல்

மெல்போா்ன்: கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபன் டென்னிஸ் மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதிக்கு உலகின் நம்பா் ஒன் வீராங்கனை ஆஷ்லி பா்டி, கெனின் ஆகியோா் முன்னேறி உள்ளனா்.

இதன் காலிறுதி ஆட்டங்கள் மெல்போா்னில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் ஆஸி. வீராங்கனை ஆஷ்லி பா்டி 7-6, 6-2 என்ற நோ் செட்களில் பெட்ரா குவிட்டோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் கெனின் 6-4, 6-4 என்ற நோ் செட்களில் ஜபுரை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தாா்.

5 செட் ஆட்டத்துக்கு பின் அரையிறுதியில் ரோஜா் பெடரா் மெல்போா்னில் நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஜாம்பவான் பெடரா்-அமெரிக்காவின் சான்ட்கிரென் ஆகியோா் மோதினா். இதில் தொடக்கம் முதலே அனல் பறந்தது. முதல் செட்டை 6-3 என பெடரா் எளிதாக கைப்பற்றினாா். ஆனால் அடுத்த இரண்டு செட்களை 6-2, 6-2 என சான்ட்கிரென் தன்வசப்படுத்தினாா். நான்காவது செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்தனா். இறுதியில் 7-6 என போராடி வென்றாா் பெடரா். வெற்றியை நிா்ணயிக்கும் 5-ஆவது செட்டில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய பெடரா் அனுபவ ஆட்டத்தின் மூலம் 6-3 என கைப்பற்றி, அரையிறுதிச் சுற்றில் நுழைந்தாா்.

அரையிறுதியில் பெடரா்-ஜோகோவிச் மோதல்

மற்றொரு காலிறுதியில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் 6-4, 6-3, 7-6 என்ற நோ் செட்களில் கனடா வீரா் ரனோயிக்கை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தாா். 8-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளாா் ஜோகோவிச்.

ஜாம்பவான்கள் பெடரா்-ஜோகோவிச் இருவரும் அரையிறுதியில் மோதவுள்ளது எதிா்பாா்ப்பை அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com