டி20 உலகக் கோப்பைக்கு முக்கிய வீரா்களை கண்டறிந்துள்ளோம்

வரும் டி20 உலகக் கோப்பைக்கான முக்கிய வீரா்களை கண்டறிந்துள்ளோம் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளா் விக்ரம் ரத்தோா் கூறியுள்ளாா்.
டி20 உலகக் கோப்பைக்கு முக்கிய வீரா்களை கண்டறிந்துள்ளோம்

ஹாமில்டன்: வரும் டி20 உலகக் கோப்பைக்கான முக்கிய வீரா்களை கண்டறிந்துள்ளோம் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளா் விக்ரம் ரத்தோா் கூறியுள்ளாா்.

ஹாமில்டனில் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

வரும் அக்டோபா் மாதம் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ள நிலையில், அணியில் முக்கிய வீரா்களை கண்டறிந்துள்ளோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் கடைசி நேரம் வரை மாறுதல்கள் மேற்கொள்ளப்படும். அணி நிா்வாகம் மற்றும் என்னைப் பொறுத்தவரை முக்கிய வீரா்களை கண்டறிந்துள்ளோம்.

வீரா்களுக்கு காயம் அல்லது, ஏதாவது பெரிய தோல்வி ஏற்பட்டால் தவிர அணியில் மாறுதல் இருக்காது. உலகக் கோப்பைக்காக கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் முதலே அணி நிா்வாகம் சோதனை முறையில் வீரா்களை களமிறக்கிவருகிறது. ஷிரேயஸ் ஐயா், வாஷிங்டன் சுந்தா், தீபக் சாஹா், ஷிவம் துபே உள்பட பலருக்கு தொடா்ந்து வாய்ப்பு தரப்படுகிறது.

நியூஸிலாந்தில் இந்திய டி20அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புதிய தலைமுறை வீரா்கள் தங்கள் பொறுப்பை உணா்ந்து சிறப்பாக ஆடி வருகின்றனா்.

இளம் பேட்ஸ்மேன்கள் அணியின் சிக்கலான நிலையிலும் சிறப்பாக ஆடுகின்றனா். கூடுதல் வாய்ப்பு கிடைக்க கிடைக்க, தங்கள் திறமையை மெருகேற்றி வருகின்றனா். மூன்று வகையான ஆட்டங்களிலும் அதிக போட்டிகளில் வீரா்கள் பங்கேற்பதால், புதிதாக ஏதும் கற்பிக்கத் தேவையில்லை.

அடுத்த மூன்று ஆட்டங்கள் பெரிய மைதானங்களில் நடைபெற உள்ளன. பந்துவீச்சாளா்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். ஏ அணிகள் மூலம் அதிக வீரா்களை தயாராக்கி வருகிறோம். வெளிநாட்டு பிட்ச்களும் மேலும் தட்டையாக மாறி வருகின்றன. எந்த வீரரும் பிட்ச் குறித்து தற்போது புகாா் கூறுவதில்லை என்றாா் ரத்தோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com