சாம் கரணுக்கு வயிற்றுப்போக்கு: நடவடிக்கை எடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

இங்கிலாந்து வீரர் சாம் கரணுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதால் அவரைப் பயிற்சி ஆட்டத்திலிருந்து விடுவித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
சாம் கரணுக்கு வயிற்றுப்போக்கு: நடவடிக்கை எடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

இங்கிலாந்து வீரர் சாம் கரணுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதால் அவரைப் பயிற்சி ஆட்டத்திலிருந்து விடுவித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8 முதல் தொடங்குகிறது. ஜூலை 28 அன்று டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான மே.இ. தீவுகள் அணியில் டேரன் பிராவோ, ஹெட்மையர், கீமோ பால் ஆகிய மூன்று வீரர்களும் இடம்பெறவில்லை. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்துக்குச் செல்ல அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக 25 மே.இ. தீவுகள் வீரர்களும் 11 நிர்வாகிகளும் இங்கிலாந்துக்கு வந்துள்ளார்கள். அனைத்து வீரர்கள், நிர்வாகிகளுக்கும் மேற்கிந்தியத் தீவுகளிலும் இங்கிலாந்திலும் கரோனா டெஸ்ட் பரிசோதனை நடைபெற்றது. அனைவரின் முடிவுகளும் நெகடிவ் என வந்துள்ளது. லண்டனில் வசிக்கும் மே.இ. தீவுகள் பயிற்சியாளர் பில் சிமன்ஸ், அணியினருடன் இணைந்துகொண்டுள்ளார். அனைவரும் எமிரேட்ஸ் ஓல்ட் டிரஃபோர்டில் மூன்று வாரங்கள் தனிமைப்படுத்திக்கொண்டு கூடவே பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியினர் தங்களுக்குள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய ஆல்ரவுண்டர் சாம் கரண், 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் நேற்றிரவு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டார். இதனால் அவரைப் பயிற்சி ஆட்டத்திலிருந்து உடனடியாக விடுவித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தற்போது சுயமாகத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள சாம் கரணுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவு வரும்வரை இங்கிலாந்து அணியின் பயிற்சி ஆட்டத்தில் அவர் கலந்துகொள்ள மாட்டார். 

கரோனா பரிசோதனை முடிவு நெகடிவ் என வந்தால் ஜூலை 8 அன்று தொடங்கவுள்ள முதல் டெஸ்டில் சாம் கரண் நிச்சயம் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com