ஓய்வு பெற்றார் பிரபல பாட்மிண்டன் வீரர் லின் டேன்!

பிரபல பாட்மிண்டன் வீரர் லின் டேன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
படம் - ஏபி
படம் - ஏபி

பிரபல பாட்மிண்டன் வீரர் லின் டேன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 20 வருடங்களாக விளையாடி வரும் சீனாவைச் சேர்ந்த 36 வயது லின் டேன், 2008 பீஜிங் ஒலிம்பிக்ஸ் மற்றும் 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார். 5 முறை உலக சாம்பியனாகியுள்ளார். ஒலிம்பிக்ஸ், உலக சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை, தாமஸ் கோப்பை, சுதிர்மன் கோப்பை, சூப்பர் சீரிஸ் மாஸ்டர்ஸ் ஃபைனல்ஸ், ஆல் இங்கிலாந்து ஓபன், ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசியன் சாம்பியன்ஷிப் என சூப்பர் கிராண்ட் ஸ்லாம் என்று அழைக்கப்படும் 9 பெரிய போட்டிகளையும் 28 வயதுக்குள் வென்றதன் மூலம் மகத்தான வீரராக மதிப்பிடப்பட்டார். இதுவரை வேறு எந்த வீரரும் இந்தச் சாதனையை நிகழ்த்தவில்லை. தரவரிசையில் நெ.1 வீரராகவும் இருந்துள்ளார்.
 
இந்நிலையில் தனது ஓய்வு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார் லின் டேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com