ரிவர்ஸ் ஸ்விங் பந்தால் பேட்ஸ்மேனைக் குழப்புவார்: ஆண்டர்சனைப் புகழும் சச்சின் டெண்டுல்கர்

பேட்ஸ்மேனை அவுட்ஸ்விங்கர் பந்துக்கு விளையாடத் தயார்ப்படுத்துவார். ஆனால்...
ரிவர்ஸ் ஸ்விங் பந்தால் பேட்ஸ்மேனைக் குழப்புவார்: ஆண்டர்சனைப் புகழும் சச்சின் டெண்டுல்கர்

மிகவும் புத்திசாலித்தனமாக ரிவர்ஸ் ஸ்விங் பந்தை வீசி பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி கொடுப்பதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனைப் புகழ்ந்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

மேற்கிந்தியத் தீவுகள் ஜாம்பவான் பிரையன் லாராவுடனான உரையாடலில் ஆண்டர்சன் பற்றி சச்சின் கூறியதாவது:

ரிவர்ஸ் ஸ்விங் பந்தும் ரிவர்ஸ் ஆகும் என்பதை முதல் முதலில் பயன்படுத்திய வீரர் ஆண்டர்சன் தான். அவுட்ஸ்விங் வீசுவது போல விரல்களில் பந்தை வைத்துக்கொண்டு திடீரென ரிவர்ஸ் ஸ்விங் பந்தை வீசுவார்.

எல்லா பேட்ஸ்மேன்களும் அவருடைய மணிக்கட்டைக் கவனிப்பார்கள். அதன் வழியாக இன்ஸ்விங்கர் பந்தை வீசுவது போல காண்பிப்பார். ஆனால் பந்து வேறுவிதமாக வெளிப்படும். 

பேட்ஸ்மேனை அவுட்ஸ்விங்கர் பந்துக்கு விளையாடத் தயார்ப்படுத்துவார். ஆனால் பந்து பிட்ச் ஆனபிறகு வேறுவிதமாக உங்களைத் தாண்டிச் செல்லும். இது எனக்குப் புதிதாக இருந்தது.

ஆண்டர்சனின் பந்துவீச்சு முறையை வேறு யாரும் பயன்படுத்தியதில்லை. தற்போது ஸ்டூவர்ட் பிராடும் அதே போல வீசப் பார்க்கிறார். ஆனால் இதை எப்போதே செய்ய ஆரம்பித்துவிட்டார் ஆண்டர்சன். எனவே அவரை மிகவும் உயர்வாகக் கருதுகிறேன். ரிவர்ஸ் ஸ்விங் பந்தை வீசுவதில் மிகத் திறமையானவர் எனப் பாராட்டு தெரிவித்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இங்கிலாந்து வீரராக ஆண்டர்சன் உள்ளார். 871 சர்வதேச விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை (584) எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com