உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் போட்டி: ஐபிஎல்-லைப் பாராட்டும் வாசிம் அக்ரம்

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் போட்டி ஐபிஎல் என வாசிம் அக்ரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் போட்டி: ஐபிஎல்-லைப் பாராட்டும் வாசிம் அக்ரம்

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் போட்டி ஐபிஎல் என வாசிம் அக்ரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என பல முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ முதலில் அறிவித்தது.

இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டி, செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டி பற்றி பாகிஸ்தானின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியதாவது:

பாகிஸ்தானில் நடைபெறும் பிஎஸ்எல் போட்டிக்கும் ஐபிஎல்-க்கும் வித்தியாசம் உண்டு. கடந்த ஐந்தாறு வருடங்களில் பெரிய வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல்-லில் ஏராளமான பணம் புழங்குகிறது. உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் போட்டி ஐபிஎல். ஓர் அணியின் பட்ஜெட் ரூ. 60-80 கோடியாக உள்ளது. எங்கள் பணத்தில் இரு மடங்கு. இதில் கிடைக்கும் லாபத்தை முதல் தர கிரிக்கெட்டில் செலவழிக்கிறார்கள். 

பிரவீன் ஆம்ரே போல ஐபிஎல்-லில் உள்ள பல வீரர்கள் தனியாகப் பயிற்சியாளர்களை வைத்துள்ளார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நல்ல பயிற்சியாளர்களாக மாறியுள்ளார்கள். இந்திய பேட்ஸ்மேனைப் பாருங்கள், எத்தகைய நம்பிக்கையுடன் விளையாடுகிறார்கள்! அவர்களுடைய கிரிக்கெட் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com