உலகின் சிறந்த ஃபீல்டர் இவர்தான்: ஜான்டி ரோட்ஸின் சான்றிதழைப் பெற்றவர் யார்?

கிரிக்கெட் மைதானத்தின் எல்லா இடங்களிலும் ஃபீல்டிங் செய்யக்கூடியவராக முதலில் நான் பார்த்தது...
உலகின் சிறந்த ஃபீல்டர் இவர்தான்: ஜான்டி ரோட்ஸின் சான்றிதழைப் பெற்றவர் யார்?


உலகின் சிறந்த ஃபீல்டர் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான ஏபி டி வில்லியர்ஸைக் குறிப்பிட்டுள்ளார் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ்.

இன்ஸ்டகிராம் உரையாடல் ஒன்றில் ரோட்ஸ் கூறியதாவது:

உலகின் மிகச்சிறந்த ஃபீல்டர் யார் எனக் கேட்கிறீர்கள்? ஏபி டி வில்லியர்ஸ். அவர் ஒரு விக்கெட் கீப்பர், ஸ்லிப் ஃபீல்டர், மிட் ஆஃப், லாங் ஆன் என எல்லா இடங்களிலும் சிறப்பாக ஃபீல்டிங் செய்வார். உலகின் மிகச்சிறந்த ஃபீல்டர் அவர் தான்.

கிரிக்கெட் மைதானத்தின் எல்லா இடங்களிலும் ஃபீல்டிங் செய்யக்கூடியவராக முதலில் நான் பார்த்தது ஆண்ட்ரூ சைமன்ட்ஸைத் தான். பலமான புஜம் உள்ளதால் பவுண்டரி எல்லைக்கோட்டின் அருகே நின்றும் ஃபீல்டிங் செய்வார். பெரிய மனிதரான சைமன்ட்ஸ் பாய்ந்து பந்தைப் பிடிப்பதற்கு அதிக முயற்சி தேவைப்படும்.

என் காலத்துக்குப் பிறகு பார்த்த சிறந்த ஃபீல்டராக டி வில்லியர்ஸைச் சொல்வேன். ஆட்டத்தை நன்குக் கவனிப்பார். பந்தைத் துரத்தி நன்கு ஓடுவார். பேட்ஸ்மேனாகவும் உள்ளதால் ஆட்டத்தின் போக்கை அவரால் அறிந்துகொள்ள முடியும் என்றார்.

கடந்த வருடம் மே 23 அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, டி20 போட்டிகளில் விளையாடி வரும் டி வில்லியர்ஸை மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற வைத்து, டி20 உலகக் கோப்பையில் விளையாட வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com