மயங்கிக் கிடந்த பறவையைக் காப்பாற்றிய தோனி: மகள் குஷி!

அந்தப் பறவையை மீண்டும் பார்ப்பேன் என நம்பிக்கையுடன் உள்ளேன் என...
மயங்கிக் கிடந்த பறவையைக் காப்பாற்றிய தோனி: மகள் குஷி!

தன் தந்தை ஒரு சிறிய பறவையைக் காப்பாற்றியது குறித்து தோனியின் மகள் ஜிவா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தோனியின் மகள் ஜிவாவுக்கு இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனி கணக்கு உள்ளது. அதில், ஒரு சிறிய பறவையைத் தன் தந்தை காப்பாற்றியது குறித்து பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் எழுதியிருப்பதாவது:

எங்கள் வீட்டுப் புல்வெளியில் ஒரு பறவை நினைவின்றி மயங்கிக் கிடந்ததைப் பார்த்தேன். உடனே என் அப்பா, அம்மாவை அழைத்தேன். என் அப்பா, அந்தப் பறவையைக் கையில் எடுத்து அதற்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தார். சிறிது நேரத்தில் அது கண் விழித்தது. இதைக் கண்டு நாங்கள் சந்தோஷம் அடைந்தோம். பிறகு ஒரு கூடையில் இலைகளைப் போட்டு அதில் அதை அமரவைத்தோம். பறவையின் பெயர் காப்பர்ஸ்மித் (கன்னான் பறவை) என அம்மா சொன்னார்.

அந்தச் சிறிய பறவை திடீரென பறந்து சென்றுவிட்டது. அது என்னுடனேயே இருக்கவேண்டும் என ஆசைப்பட்டேன். அது தன் அம்மாவிடம் சென்றுவிட்டதாக என் அம்மா சொன்னார். அந்தப் பறவையை மீண்டும் பார்ப்பேன் என நம்பிக்கையுடன் உள்ளேன் என எழுதியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com