ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டத்திலாவது விளையாட வேண்டும்: சுழற்பந்து வீச்சாளர் சஹல் விருப்பம்

ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டத்திலாவது விளையாட வேண்டும் என இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சஹல் கூறியுள்ளார்.
ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டத்திலாவது விளையாட வேண்டும்: சுழற்பந்து வீச்சாளர் சஹல் விருப்பம்

ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டத்திலாவது விளையாட வேண்டும் என இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சஹல் கூறியுள்ளார்.

52 ஒருநாள், 42 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள சஹால் இதுவரை ஒரு டெஸ்டிலும் விளையாடவில்லை. இதுபற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

ஒரே ஒரு டெஸ்டிலாவது விளையாட வேண்டும். குறைந்தபட்சம் டெஸ்ட் அணியிலாவது இடம்பிடிக்கவேண்டும். அது ஒரு தனி உணர்வு.

நானும் குல்தீப்பும் இளம் வயது முதல் ஒன்றாக விளையாடி, ஒன்றாகப் பந்துவீசி வருகிறோம். இருவரும் ஒன்றாக விளையாடும்போது பலவிதமான பந்துகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையில் பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள். நான் நன்றாகப் பந்துவீசினால் குல்தீப் யாதவுக்கு விக்கெட்டுகள் கிடைக்க வாய்ப்புகள் உருவாகும்.

நடு ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க முயல்வோம். கோலி, ரோஹித் இருவரில் யார் கேப்டன்களாக இருந்தாலும் விக்கெட்டுகளை எடுக்கும்படி எங்களிடம் கூறுவார்கள். 10 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்தாலும் 3 விக்கெட்டுகளை எடுப்பதன் மூலம் அணிக்குப் பயனுள்ளதாக இருக்க முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com