கரோனா வைரஸால் பாதிக்கப்படுவேன் என முன்பே தெரியும்: சாஹித் அப்ரிடி

கடந்த சில நாள்களாக எனது உடல்நிலை குறித்து சமூகவலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதால்...
கரோனா வைரஸால் பாதிக்கப்படுவேன் என முன்பே தெரியும்: சாஹித் அப்ரிடி

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாஹித் அப்ரிடி, தற்போதைய நிலவரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடிக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியான தகவல் சில நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியதாவது:

வியாழன் முதல் எனக்கு உடல்நலம் சரியில்லை. உடல்வலி அதிகமாக உள்ளது. பரிசோதனை செய்து பார்த்ததில் கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. விரைவில் குணமாக அனைவரும் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறினார். இதற்கு முன்பு டஃபீக் உமர், ஷஃபர் சர்பராஸ் ஆகிய இரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து அப்ரிடி ஒரு விடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

கடந்த சில நாள்களாக எனது உடல்நிலை குறித்து சமூகவலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதால் இந்த விடியோவை வெளியிடுகிறேன். முதல் மூன்று நாள்கள் கடினமாக இருந்தன. ஆனால் எனது உடல்நிலை தற்போது தேறி வருகிறது. இதில் உள்ள பெரிய கஷ்டமே, எனது குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள முடியாமல் போவதுதான். அவர்களை அணைத்துக்கொள்ளவும் முடியவில்லை. ஆனால் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் பாதுகாப்புடன் இருக்க இடைவெளி காப்பது அவசியம். இதுகுறித்து பதற்றம் அடையவேண்டியதில்லை. 

நிவாரணப் பணிகளுக்காக நிறைய பயணம் செய்கிறபோது கரோனா வைரஸின் பாதிப்புக்கு ஆளாவேன் என்பதை அறிந்திருந்தேன். நல்லவேளை, இது தாமதமாக ஏற்பட்டது. இல்லாவிட்டால் என்னால் பலருக்கு உதவ முடியாமல் போயிருக்கும். பாகிஸ்தானிலும் பாகிஸ்தானுக்கு வெளியேயும் எனக்காகப் பிரார்த்தனை செய்பவர்கள் பலர் உள்ளார்கள் என்பதை அறிந்துகொண்டேன் என்றார். 

40 வயது அப்ரிடி, பாகிஸ்தான் அணிக்காக 27 டெஸ்டுகள், 398 ஒருநாள், 99 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com