ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் டி20 ஆட்டம் ரத்து

ஜூலை 29 அன்று நடைபெறுவதாக இருந்த ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் டி20 ஆட்டம் ரத்தாகியுள்ளது.
ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் டி20 ஆட்டம் ரத்து

ஜூலை 29 அன்று நடைபெறுவதாக இருந்த ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் டி20 ஆட்டம் ரத்தாகியுள்ளது.

2020-21 சீஸனுக்காக அட்டவணையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கிறது. ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 15 வரை இத்தொடர் நடைபெறுகிறது. அக்டோபர் 4-9 வரை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் டி20 தொடர் நடைபெறுகிறது. நவம்பரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் ஆட்டமும் ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்கள் நடைபெறுகின்றன. இந்த அட்டவணையில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரையிலான டி20 உலகக் கோப்பையும் இடம்பெற்றுள்ளது.

இந்திய அணி டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. டிசம்பர் 3 முதல் ஜனவரி 7 வரை இரு அணிகளுக்கு இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின்னர் ஜனவரி மாதம்  3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த அட்டவணைகள் மாறுதலுக்கு உட்பட்டவை என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

ஜூலை 29 அன்று எடின்பர்க்கில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக டி20 ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி விளையாட இருந்தது. இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த டி20 ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கடுத்து இங்கிலாந்தில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மூன்று ஒருநாள், மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்தத் தொடர்களை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைப்பது தொடர்பாக இரு நாட்டு வாரியங்களும் தற்போது பேசி வருகின்றன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com