டெஸ்ட் கிரிக்கெட்டின் மகத்துவம் பற்றி டி20 நட்சத்திரம் கிறிஸ் கெயில்!

டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் சவாலானது என பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் கூறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் மகத்துவம் பற்றி டி20 நட்சத்திரம் கிறிஸ் கெயில்!

டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் சவாலானது என பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

டெஸ்ட் கிரிக்கெட் தான் முக்கியமானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும்போது, மைதானத்துக்கு வெளியே வாழ்க்கையை வாழ்வது குறித்தும் நாம் அறிந்துகொள்கிறோம். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டின் 5 நாள்களும் சவாலானது. 

உங்கள் திறமையைக் கடுமையாகப் பரிசோதிக்கும். படுக்கையிலிருந்து எழும்போதும் படுக்கைக்குச் செல்லும்போதும் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு அவசியமாகிறது. தடுமாறும்போது அதிலிருந்து மீண்டு வரவும் வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் உங்கள் திறமையைப் பரிசோதிக்கும். இதில் ஜெயிக்க மனவலிமையும் அவசியம். கடுமையாகப் பயிற்சி எடுத்து மகிழ்ச்சியாக விளையாடுங்கள். ஒன்றில் தோற்றுவிட்டால் நினைவுகொள்ளுங்கள், எப்போதும் உங்களுக்காக இன்னொரு வாய்ப்பு இருக்கும். எனவே மனமுடைந்து போகவேண்டாம் என்று கூறியுள்ளார்.

ஒருநாள், டி20 ஆட்டங்களில் சிறந்த வீரராக அறியப்படும் கிறிஸ் கெயில், 103 டெஸ்டுகளில் விளையாடி 7,000 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com