முகப்பு விளையாட்டு செய்திகள்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: 15 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
By எழில் | Published On : 03rd March 2020 10:46 AM | Last Updated : 03rd March 2020 10:46 AM | அ+அ அ- |

இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதும் ஒருநாள் தொடர் மார்ச் 12 முதல் தொடங்குகிறது.
இந்தத் தொடருக்கான குயின் டி காக் தலைமையிலான 15 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பொறுப்பிலிருந்து சமீபத்தில் விலகிய டு பிளெஸ்ஸிஸும் அணியில் இடம்பெற்றுள்ளார். 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியில் அவர் விளையாடவுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி:
குயிண்டன் டி காக் (கேப்டன்), டெம்பா பவுமா, வான் டர் டுஸ்ஸென், டு பிளெஸ்ஸிஸ், கைல் வெர்ரேன்னே, கிளாசென், டேவிட் மில்லர், ஜோன் ஸ்மட்ஸ், ஆண்டில் பெலுக்வயோ, என்ஜிடி, லுதோ சிபம்லா, ஹெண்ட்ரிக்ஸ், ஆண்ரிச் நார்ட்ஜே, லிண்டே, கேஷவ் மஹாராஜ்.