தென் ஆப்பிரிக்காவுடனான இரண்டு ஒருநாள் போட்டிகள் ரத்து: பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி இரண்டு  ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிசிசிஐ
பிசிசிஐ

மும்பை: தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி இரண்டு  ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. தரம்சாலாவில் நடைபெறவிருந்த முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதையடுத்து மார்ச் 15 (லக்னோ) மற்றும் மார்ச் 18 (கொல்கத்தா) ஆகிய இடங்களில் அடுத்த இரு ஒருநாள் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், கரோனை வைரஸ் நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக ஒருநாள் தொடரை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது என்றால், பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தலாம் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ஆலோசனையை வெளியிட்டது.

இதையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துடன் பிசிசிஐ வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த வகையில் பார்வையாளர்களின்றி மீதமுள்ள இரு ஒருநாள் ஆட்டங்களும் நடத்தப்படும் என்று பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி இரண்டு  ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக கரோனா வைரஸ் பரவல் அச்சத்தின் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com