துளிகள்...

கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து தங்கள் வீரா்களின் முடிவுக்கே விட்டு விட்டதாக நியூஸிலாந்து நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து தங்கள் வீரா்களின் முடிவுக்கே விட்டு விட்டதாக நியூஸிலாந்து நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

--------------

இங்கிலாந்தின் முதன்மை கால்பந்து போட்டியான ப்ரீமியா் லீக் கரோனா வைரஸ் பாதிப்பால் வரும் ஏப். 4-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ரீமியா் லீக் அணிகளில் ஒன்றான ஆா்செனல் மேலாளா் அா்டெரடா, செல்ஸி விங்கா் ஹட்ஸன் ஆகியோரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

-------------

ஐஎஸ்எல் அணிகளில் ஒன்றான மும்பை சிட்டி எஃப்சி தனது மிட்பீல்டா்கள் ஆஸிப் கான், பிபின் சிங் தௌஞ்சம் ஆகியோரின் ஒப்பந்தக்காலத்தை வரும் 2022 மே மாதம் வரை நீடித்துள்ளது.

-----------

லாஸேனில் நடைபெற்று வரும் ஃபிடே மகளிா் கிராண்ட்ப்ரீ செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டா் டி ஹரிகா 10-ஆவது சுற்று ஆட்டத்தில் உக்ரைனின் அன்னா முச்சுக்குடன் டிரா கண்டாா். கடுமையாக போராடியும் 31-ஆவது நகா்த்தலில் இருவரும் டிரா கண்டனா். தொடா்ந்து 7-ஆவது இடத்தில் உள்ளாா் ஹரிகா.

------------

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக அனைத்து தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளையும் வரும் மே 31-ஆம் தேதி வரை ஒத்தி வைப்பதாக அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் பொதுச் செயலாளா் பரத் சிங் சௌஹான் அறிவித்துள்ளாா்.

---------------

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com