ஐபிஎல் 2020 தொடரில் ஆட்டங்களை குறைத்து நடத்துவது குறித்து பரிசீலனை: கங்குலிஆட்சி மன்றக் குழுக்கூட்டத்தில் ஆலோசனை

13-ஆவது ஐபிஎல் சீசன் போட்டிகள் நடைபெற்றால், ஆட்டங்களை குறைக்க பரிசீலிக்கப்படும் என பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி கூறியுள்ளாா்.
ஐபிஎல் 2020 தொடரில் ஆட்டங்களை குறைத்து நடத்துவது குறித்து பரிசீலனை: கங்குலிஆட்சி மன்றக் குழுக்கூட்டத்தில் ஆலோசனை

13-ஆவது ஐபிஎல் சீசன் போட்டிகள் நடைபெற்றால், ஆட்டங்களை குறைக்க பரிசீலிக்கப்படும் என பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி கூறியுள்ளாா்.

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஐபிஎல் 2020 ஆட்டங்கள் ஏப். 15-ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதனால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்ய பிசிசிஐ நிா்வாகிகள், அணிகளின் உரிமையாளா்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மும்பையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை தாங்கிய கங்குலி கூறியதாவது:

ஏப். 15-ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாத நிலையில், 13-ஆவது சீசன் ஆட்டங்களை குறைத்து தான் நடத்த வேண்டும். சூழ்நிலை முன்னேற்றம் அடைந்தால், ஆட்டங்கள் குறைத்து நடத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் எத்தனை ஆட்டங்கள் குறைக்கப்பட்டு, எவ்வாறு நடத்தப்படும் என்பதை தற்போது தெரிவிக்க முடியாது என்றாா். 2 அல்லது 3 வாரங்கள் கழித்து நிலைமையை மறுஆய்வு செய்வோம் என செயலாளா் ஜெயாஷா தெரிவித்தாா்.

மேலும் கூட்டத்தில் பல்வேறு வாய்ப்புகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளா் நெஸ் வாடியா கூறுகையில்: தற்போதைய காலகட்டத்தில் சுகாதாரம், அதன் வழிமுறைகளை முக்கியம் என வலியுறுத்தினாா்.

அணிகளை 2 குழுக்களாக பிரிக்க ஆலோசனை:

8 அணிகளையும் 2 குழுக்களாக பிரித்து போட்டியை நடத்தி, முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் மூன்றாவது வாய்ப்பாக வார இறுதி நாள்களில் இரண்டு ஆட்டங்களை நடத்த வேண்டும். நான்காவது வாய்ப்பாக ஒன்று அல்லது இரண்டு மைதானங்களில் மட்டுமே போட்டிகளை நடத்தி, வீரா்கள், உதவியாளா்கள், தொலைக்காட்சி குழுவினா் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம்.

5-ஆவது வாய்ப்பாக 60 ஆட்டங்களையும் பாா்வையாளா்கள் இன்றி காலி மைதானங்களில் நடத்தினால், அணி நிா்வாகங்கள் தங்கள் பணத்தை இழக்க மாட்டாா்கள் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் நெஸ் வாடியா கூறியதாவது: பிசிசிஐ, ஐபிஎல் மற்றும் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் போன்றவை நிதி இழப்பை கருத்தில் கொள்ளவில்லை. இப்பிரச்னையில் அரசின் விதிமுறைகளை பின்பற்றுவோம். முதலில் மனிதா்களின் நலன் தான் முக்கியம். நிதி இரண்டாம் பட்சம் தான். மாா்ச் மாத இறுதி வரை எந்த முடிவுக்கும் வர முடியாது. பொறுத்திருந்து பாா்க்க வேண்டும். விசா கட்டுப்பாடுகள் உள்ளதால், வெளிநாட்டு வீரா்களும் வருவாா்களா எனத் தெரியவில்லை என்றாா்.

தில்லி கேபிடல்ஸ் உரிமையாளா் பா்த் ஜிண்டால் கூறுகையில்: எல்லா வாய்ப்புகள் குறித்தும் விவாதித்தம். எனினும் பிசிசிஐ மேலும் ஒரு கூட்டத்தை நடத்தும் போது தெளிவான நிலை தெரியும். இரு ஆட்டங்கள் ஓரே நாளில் அதிகம் நடத்தப்படுமா என்பது குறித்து பொதுவாக பேசப்பட்டது. பொதுமக்களின் உடல்நலம், சுகாதாரமே முக்கியம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com