கரோனா அச்சுறுத்தல்: சென்னை மக்கள் மீது அஸ்வின் அதிருப்தி!

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மக்கள் கடைப்பிடிக்கத் தவறுவதாக கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் வேதனை தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல்: சென்னை மக்கள் மீது அஸ்வின் அதிருப்தி!

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மக்கள் கடைப்பிடிக்கத் தவறுவதாக கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் வேதனை தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 6,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 100 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ட்விட்டரில் அஸ்வின் கூறியதாவது:

ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறு கூறியதை சென்னை மக்கள் இன்னமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. சென்னையில் நிலவும் கடுமையான வெப்ப நிலையால் கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் என மக்கள் நினைத்திருக்கலாம். அல்லது தங்களை எதுவும் தாக்காது என அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கலாம் என சென்னை மக்கள் மீதான தனது அதிருப்தியை அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com