தோனி இந்திய அணியின் சொத்து: வாசிம் ஜாஃபர்

மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பிங்கில் இந்திய அணியின் சொத்து என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
தோனி இந்திய அணியின் சொத்து: வாசிம் ஜாஃபர்


மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பிங்கில் இந்திய அணியின் சொத்து என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் 31 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி 34.11 சராசரியுடன் 5 சதம், 11 அரைசதம் உட்பட மொத்தம் 1944 ரன்கள் குவித்துள்ளார். இவர் கடந்த 7-ஆம் தேதி அனைத்து ரக கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி குறித்து சுட்டுரைப் பதிவில் அவர் குறிப்பிடுகையில்,

"தோனி உடற்தகுதியுடனும், நல்ல நிலையிலும் இருந்தால் அவருக்கு அப்பாற்பட்டு வேறு யாரையும் தேட வேண்டிய அவசியமில்லை. விக்கெட் கீப்பிங்கிலும், பின்வரிசை பேட்டிங்கிலும் இவர் இந்திய அணியின் சொத்து. இது கீப்பிங்கில் ராகுலின் அழுத்தத்தைக் குறைக்கும். இடதுகை பேட்ஸ்மேன் வேண்டுமென்றால் இந்தியா பந்த்தையும் சேர்த்துக் கொள்ளலாம்" என்றார்.

கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்தான் சர்வதேச கிரிக்கெட்டில் தோனி கடைசியாக விளையாடியது. எனவே, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனியின் செயல்பாட்டைப் பொறுத்தே அவர் இந்திய அணியில் இடம்பிடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சுகள் எழத் தொடங்கின. ஆனால், தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரே நடைபெறுமா என்பது உறுதியற்ற நிலையில்தான் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com