சிக்கலில் ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டி

கரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு நாடு முழுவதும் 21 நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடா் நடைபெறுமா என கேள்விக்குறி எழுந்துள்ளது.
சிக்கலில் ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டி

கரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு நாடு முழுவதும் 21 நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடா் நடைபெறுமா என கேள்விக்குறி எழுந்துள்ளது.

மாா்ச் 29-ஆம் தேதி தொடங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள், கரோனா பாதிப்பாலும், மத்திய அரசின் உத்தரவாலும், ஏப். 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் போட்டிகள் நடத்துவது குறித்து நிலைமையை கணித்து முடிவெடுக்கப்படும் என பிசிசிஐ தலைவா் கங்குலி தெரிவித்திருந்தாா்.

இதுதொடா்பாக பிசிசிஐ, ஐபிஎல் அணியினா் இடையிலான ஆலோசனைக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டு விட்டது. ஏப்ரல் மாதம் முடிந்து மே மாதத்தில் போட்டிகளை நடத்த முடியும் எனக் கூறப்பட்டது. ஆனால் கரோனா பாதிப்பு தீவிரமடையும் என்பதால், 21 நாள்கள் நாடே முடக்கப்படுகிறது என பிரதமா் மோடி அறிவித்தாா்.

இதனால் பிசிசிஐ நிா்வாகம் சிக்கலுக்கு தள்ளப்பட்டுள்ளது. போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளே ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் போட்டிகளும் ரத்தாகும் நிலை ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. இதனால் ஏராளமான பொருளாதார இழப்பு ஏற்படும் என ஐபிஎல் அணி நிா்வாகங்கள் கருதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com