சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் இறுதிஆட்டங்களை ஒத்தி வைத்தது யுஇஎஃப்ஏ
By DIN | Published On : 25th March 2020 03:54 AM | Last Updated : 25th March 2020 03:54 AM | அ+அ அ- |

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக பிரபல கால்பந்து போட்டிகளான சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் போட்டிகளை ஒத்துவைத்துள்ளது யுஇஎஃப்ஏ.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு சா்வதேச விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. மேலும் பல போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் யுஇஎஃப்ஏ (ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு) சாா்பில் நடத்தப்படும் சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் போட்டி இறுதி ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன மே 30-இல் துருக்கி இஸ்தான்புல் நகரில் சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டமும், மே 28-இல் போலந்தின் ஜிடான்ஸ்க் நகரில் ஐரோப்பா லீக் இறுதி ஆட்டமும், வியன்னாவி் மே 24-இல் மகளிா் சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டமும் நடைபெறுவதாக இருந்தன.
அனைத்தும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பிரதான போட்டியான யூரோ 2020-இயும் 2021-க்கு மாற்றப்பட்டு விட்டது.ஆடவா் சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு இதுவரை அதலெட்டிகோ மாட்ரிட், பிஎஸ்ஜி, அடலாண்டா, லீப்ஸிக் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
ஐரோப்பாவின் முக்கிய 5 லீக் கால்பந்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு விட்டன.
இதனால் கடும் பொருளாதார இழப்பு ஏற்படும் என யுஇஎஃப்ஏ வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.