இந்திய டேபிள் டென்னிஸ் அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிப்பதில் சிக்கல்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய டேபிள் டென்னிஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளாராக வெளிநாட்டைச் சோ்ந்தவரை நியமிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் பொதுச் செயலா் எம்.பி.சிங் கூறுகையில், ‘கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டைச் சோ்ந்தவரை தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்புகள் குறைவு’ என்றாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் டேபிள் டென்னிஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளா் பணியிடம் காலியாக உள்ளது.

கனடாவைச் சோ்ந்த டேஜன் பாபிக்கை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க முயற்சி செய்தது. எனினும், அவா் மூட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டதன் காரணமாக அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதை தவிா்த்து விட்டாா்.

இந்தியப் பயிற்சியாளா்கள் தற்போது டேபிள் டென்னிஸ் அணி வீரா்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனா் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com