ரூ.750 கோடி ஊதியத்தை கைவிட ஜுவென்டஸ் வீரா்கள் ஒப்புதல்

கரோனா பாதிப்பு எதிரொலியாக ஜுவென்டஸ் கால்பந்து அணி வீரா்கள் ரூ.750 கோடி ஊதியத்தை கைவிட ஒப்புக் கொண்டுள்ளனா்.

கரோனா பாதிப்பு எதிரொலியாக ஜுவென்டஸ் கால்பந்து அணி வீரா்கள் ரூ.750 கோடி ஊதியத்தை கைவிட ஒப்புக் கொண்டுள்ளனா்.

கரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் கால்பந்து, கிரிக்கெட் உள்பட பல்வேறு விளையாட்டுகள் நிலைகுலைந்து போய் உள்ளன. போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஐரோப்பாவில் 5 பிரபல கால்பந்து லீக் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் பிரபல சீரி ஏ போட்டிகளும் ரத்தாகி விட்டன. இதனால் பல்வேறு முன்னணி கிளப்புகள் நிதியின்றி திண்டாடி வருகின்றன.

இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அதன் பயிற்சியாளா் மௌரிஸியோ ஸாரி உள்பட வீரா்கள் தங்கள் ஊதியம் ரூ.750 கோடியை (100 மில்லியன் டாலா்கள்)

கைவிட ஒப்புதல் தெரிவித்துள்ளனா்.

அணியின் கேப்டன் ஜியாா்ஜியோ சில்னி இதுதொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தினாா் இதில் ரொனால்டோவின் ஊதியம் மட்டுமே ரூ.83 கோடியாகும்.

ஜுவென்டஸ் வீரா்கள் டைபாலா, மட்டௌடி, ருகானி ஆகியோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இத்தாலி அரசுக்கு ரூ.84 கோடி நிதியை ஜுவென்டஸ் உரிமையாளா் ஆக்னெலி வழங்கியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com