ஹான்சி குரோனியேவின் தந்தை காலமானார்

வயிற்று புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த எவி குரோனியே சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார்.
படம் - https://twitter.com/AllanDonald33
படம் - https://twitter.com/AllanDonald33

90களில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முக்கிய அடையாளமாக இருந்தவர் ஹான்ஸி குரோனியே. 2000-ம் ஆண்டில் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டில் சிக்கியதால் வாழ்நாள் தடையை அனுபவித்தார். இரு வருடங்கள் கழித்து விமான விபத்தில் மரணமடைந்தார்.

ஹான்சி குரோனியாவின் தந்தை எவி குரோனியே. தென் ஆப்பிரிக்காவில் ஃப்ரீ ஸ்டேட் அணிக்காக 27 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியவர். ப்ரீ ஸ்டேட் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவராகப் பணியாற்றியவர். 1983 முதல் 1990 வரை அப்பதவியில் இருந்தார். ஆலன் டொனால்ட் உள்ளிட்ட முக்கிய கிரிக்கெட் வீரர்களின் ஆலோசராகவும் இருந்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் வளர்ச்சிக்குப் பங்காற்றியதால் 2012-ல் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், எவி குரோனியேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை அளித்தது.

வயிற்று புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த எவி குரோனியே சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார். அவருக்கு வயது 80. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இறுதிச்சடங்குகளைத் தவிர்த்துள்ளது எவி குரோனியேவின் குடும்பம். அவருக்கு சான் மேரி என்கிற மனைவியும் பிரான்ஸ் என்கிற மகனும் ஹெஸ்டர் என்கிற மகளும் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com