ஐபிஎல் நடைபெறாவிட்டால் ரூ. 4000 கோடி இழப்பு: கங்குலி

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறாவிட்டால் ரூ. 4000 கோடி இழப்பு ஏற்படும் என பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் நடைபெறாவிட்டால் ரூ. 4000 கோடி இழப்பு: கங்குலி

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறாவிட்டால் ரூ. 4000 கோடி இழப்பு ஏற்படும் என பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டி, மார்ச் 29 முதல் மே 24 வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியின் நிலைமை குறித்து ஒரு பேட்டியில் செளரவ் கங்குலி கூறியதாவது:

எங்களுடைய நிதி நிலைமையை நாங்கள் ஆராய வேண்டும். கைவசம் எவ்வளவு உள்ளது என்பதை அறிந்த பிறகு ஒரு முடிவெடுக்கவேண்டும். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறாவிட்டால் ரூ. 4000 கோடி இழப்பு ஏற்படும். இந்த இழப்பு மிகவும் பெரியது. ஐபிஎல் நடைபெறாவிட்டால் சம்பளத்தில் கை வைக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

காலி மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் அதன் ஈர்ப்பு மிகவும் குறைவாக இருக்கும். 1999-ல் பாகிஸ்தானுக்கு ஒரு டெஸ்டில் கடைசி நாளன்று ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு குறைவாக இருந்தது. குறைவான ரசிகர்களைக் கொண்டு ஐபிஎல் போட்டி நடத்தினாலும் பல பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com