ஐசிசி தலைவர் பதவி: கங்குலிக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விளக்கம்

ஐசிசி தலைவர் பதவிக்கு செளரவ் கங்குலிக்கு ஆதரவு தருவது தொடர்பாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
ஐசிசி தலைவர் பதவி: கங்குலிக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விளக்கம்

ஐசிசி தலைவர் பதவிக்கு செளரவ் கங்குலிக்கு ஆதரவு தருவது தொடர்பாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

ஐசிசி அமைப்பின் தலைவர் பதவியில் கங்குலி அமரவேண்டும் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநரும் முன்னாள் வீரருமான கிரீம் ஸ்மித் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) வாரியம் சாரா முதல் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த சஷாங்க் மனோகர் போட்டியின்றி 2016-ம் வருடம் மே மாதம் தேர்வு செய்யப்பட்டார். 2018 மே மாதம், ஐசிசி தலைவராக சஷாங்கர் மனோகர் மீண்டும் தேர்வானார். அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக ஐசிசி தெரிவித்தது.

மனோகரின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இந்தமுறை தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன் என மனோகர் அறிவித்துவிட்டார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கோலின் கிரேவ்ஸ், ஐசிசியின் அடுத்த தலைவராகப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பிசிசிஐ தலைவர் கங்குலி, ஐசிசி தலைவராக வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஐசிசி வருடாந்திரக் கூட்டத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

ஐசிசி தலைவராக கங்குலி தேர்வு செய்யப்படுவதற்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநரும் முன்னாள் வீரருமான கிரீம் ஸ்மித் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: தற்போதைய கடினமான சூழலில் ஐசிசி தலைவர் பதவி என்பது மிகவும் முக்கியமானது. கங்குலி போன்ற தலைமைப்பண்பு உள்ள ஒருவர் அப்பதவியில் அமரவேண்டும் என்றார். இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் கோவரும் கங்குலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலி தேர்வு செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐசிசி தலைவர் பதவிக்கு செளரவ் கங்குலிக்கு ஆதரவு தருவது தொடர்பாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதன் தலைவர் கிறிஸ் நென்சானி இதுபற்றி கூறியதாவது:

ஐசிசியின் நெறிமுறிகளை நாங்கள் மதிக்கிறோம். ஐசிசி தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுகிறார்கள் என இதுவரை அறிவிப்பு வெளிவரவில்லை. அப்படி அறிவிப்பு வரும்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஒரு முடிவெடுக்கும். ஸ்மித்தின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கிறோம். எனினும் ஐசிசி தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவரை முன்பே அறிந்துகொள்ள விரும்பவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com