இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: அட்டவணையை வெளியிட்ட ஆஸி. ஊடகங்கள்!

இத்தொடர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: அட்டவணையை வெளியிட்ட ஆஸி. ஊடகங்கள்!

இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் நான்கு டெஸ்டுகள், மூன்று ஒருநாள் ஆட்டங்களை டிசம்பர், ஜனவரியில் விளையாடவுள்ளது இந்திய அணி. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தத் தொடர்கள் நடைபெறாமல் போனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்புக்கு ரூ. 1,480 கோடி (196 மில்லியன் டாலர்) நஷ்டம் ஏற்படும்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு, ஆஸ்திரேலிய அரசிடம் தொடர்ந்து இதுகுறித்து விவாதித்து வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யவிருந்தால் பின்பற்றவேண்டிய நடைமுறைகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் தொடங்கும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரிச்சர்ட் கோல்பெக் பேசியது, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இத்தொடருக்கு முன்பு நவம்பர் 21-25 தேதிகளில் பெர்த்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி விளையாடுகிறது. இத்தொடர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.

2018-2019-ல் ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை அடைந்தது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது. தொடர் நாயகன் விருது புஜாராவுக்குக் கிடைத்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் அட்டவணை

முதல் டெஸ்ட்: டிசம்பர் 3-7, பிரிஸ்பேன்

2-வது டெஸ்ட்: டிசம்பர் 11-15, அடிலெய்ட் (பகலிரவு)

3-வது டெஸ்ட்: டிசம்பர் 26-30, மெல்போர்ன்

4-வது டெஸ்ட்: ஜனவரி 3-7, சிட்னி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com