பெங்கால் கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி

பெங்கால் கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி

தேர்வுக்குழு உறுப்பினரான சாகர்மோய் சென்சர்மாவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தேர்வுக்குழு உறுப்பினரான சாகர்மோய் சென்சர்மாவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதுபற்றி பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அவிஷேக் டால்மியா கூறியதாவது:

முதலில் சென்சர்மாவின் மனைவிக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அவர் அந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு நல்ல உடல்நிலையை அடைந்துவிட்டார். இப்போது சென்சர்மாவும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவருடைய இதர குடும்ப உறுப்பினர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை. இதையடுத்து பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் சென்சர்மாவுக்குத் தரவேண்டிய அனைத்துத் தொகையும் தரப்பட்டுவிட்டன என்று கூறியுள்ளார்.

1989-90 ரஞ்சி கோப்பையை பெங்கால் அணி வென்றபோது சாகர்மோய் சென்சர்மாவும் அந்த அணியில் இடம்பெற்றிருந்தார். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சென்சர்மா தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கரோனா வைரஸால் இதுவரை 4,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com