Enable Javscript for better performance
Only 2 of the 100 highest paid athletes on the planet are women- Dinamani

சுடச்சுட

    

    100 பேர் கொண்ட போர்ப்ஸ் வருட வருமானப் பட்டியலில் இடம்பிடித்த இரு வீராங்கனைகள்!

    By DIN  |   Published on : 30th May 2020 01:16 PM  |   அ+அ அ-   |    |  

    osaka_serena1

    படம் - twitter.com/WTA/

     

    கடந்த ஒரு வருடத்தில் உலகளவில் அதிக வருவாய் ஈட்டிய முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    2019 ஜூன் 1 முதல் 2020 ஜூன் 1 வரையிலான வீரர்களின் பரிசுத் தொகை, விளம்பர ஒப்பந்த வருமானம் போன்றவற்றைக் கொண்டு போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டு வருமானத்தை மதிப்பிட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் உலகளவில் அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் முழுப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வீரர்கள், வீராங்கனைகள் என இரு தரப்பிலும் உள்ளவர்களைக் கொண்டு இந்த 100 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    வீரர்கள் பட்டியலில் முதல் முறையாக டென்னிஸ் பிரபலம் ரோஜர் ஃபெடரர் முதலிடம் பிடித்துள்ளார். கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி ரூ. 803 கோடி வருமானம் ஈட்டி இந்தப் பெருமையை அடைந்துள்ளார் ஃபெடரர்.

    100 பேர் கொண்ட பட்டியலில் வீராங்கனைகளில் முதலிடம் பிடித்தவர், ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா. கடந்த ஒரு வருடத்தில் ரூ. 284 கோடி (37.4 மில்லியன் டாலர்) வருமானம் ஈட்டியுள்ளார் 22 வயது ஒசாகா. ஒட்டுமொத்தப் பட்டியலில் அவருக்கு 29-வது இடமே கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பிடித்த மற்றொரு வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். அவருக்கு 33-வது இடம். இதற்கு முன்பு கடந்த 2016-ம் ஆண்டு செரீனா வில்லியம்ஸும் மரியா ஷரபோவாவும் 100 பேர் பட்டியலில் இடம்பிடித்தார்கள்.

    1990 முதல் டென்னிஸ் வீராங்கனைகளின் வருமானத்தை போர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டு வருகிறது. இந்த விதத்தில், இதுவரை எந்தவொரு விளையாட்டு வீராங்கனையும் ஓர் ஆண்டில் ரூ. 284 கோடி வருமானம் ஈட்டியதில்லை. இதன்மூலம் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார் ஒசாகா. இதற்கு முன்பு 2015-ல் மரியா ஷரபோவா 225.65 கோடி வருமானம் ஈட்டியதே அதிகமாக இருந்தது. அந்தச் சாதனையை ஒசாகா தாண்டியுள்ளார்.

    முதல் இடத்தைப் பிடித்த ஒசாகா, கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்த வருடம் செரீனாவின் வருமானத்தை விடவும் ரூ. 10.64 கோடி (1.4 மில்லியன் டாலர்) அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளார் ஒசாகா.

    கடந்த வருடம், உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (37) நான்காவது முறையாக முதலிடத்தைப் பிடித்தார். அவரது ஆண்டு வருவாய் சுமார் ரூ 207 கோடி ($29.2 மில்லியன்)  என்று மதிப்பிடப்பட்டது. இந்த வருடம் செரீனா வில்லியம்ஸ் 36 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளார்.

    100 பேர் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய வீரர், விராட் கோலி. கடந்த ஒரு வருடத்தில் ரூ. 196 கோடி சம்பாதித்து 66-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த வருடம் அவர் 100-வது இடத்தைப் பிடித்திருந்த நிலையில் இந்த வருடம் முன்னேற்றம் அடைந்துள்ளார். எனினும் இந்திய வீராங்கனைகள் ஒருவரும் இந்தப் பட்டியலில் இடம்பிடிக்கவில்லை.

    TAGS
    forbes

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp