ரூ. 196 கோடி வருட வருமானம்: போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய வீரர்!

கடந்த ஒரு வருடத்தில் உலகளவில் அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் பட்டியலில்...
ரூ. 196 கோடி வருட வருமானம்: போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய வீரர்!

கடந்த ஒரு வருடத்தில் உலகளவில் அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ரோஜர் ஃபெடரர் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு 66-வது இடம் கிடைத்துள்ளது.

2019 ஜூன் 1 முதல் 2020 ஜூன் 1 வரையிலான வீரர்களின் பரிசுத் தொகை, விளம்பர ஒப்பந்த வருமானம் போன்றவற்றைக் கொண்டு போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டு வருமானத்தை மதிப்பிட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் உலகளவில் அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் முழுப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வீரர்கள், வீராங்கனைகள் என இரு தரப்பிலும் உள்ளவர்களைக் கொண்டு இந்த 100 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் பட்டியலில் முதல் முறையாக டென்னிஸ் பிரபலம் ரோஜர் ஃபெடரர் முதலிடம் பிடித்துள்ளார். கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி ரூ. 803 கோடி வருமானம் ஈட்டி இந்தப் பெருமையை அடைந்துள்ளார் ஃபெடரர்.

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள அதிக வருவாய் ஈட்டிய முதல் 100 வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய வீரர், விராட் கோலி. கடந்த ஒரு வருடத்தில் ரூ. 196 கோடி சம்பாதித்து 66-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த வருடம் அவர் 100-வது இடத்தைப் பிடித்திருந்த நிலையில் இந்த வருடம் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com