கிறிஸ் கெயிலுக்கு அபராதம்
By DIN | Published On : 01st November 2020 07:32 AM | Last Updated : 01st November 2020 07:32 AM | அ+அ அ- |

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்களில் ஆட்டமிழந்த பஞ்சாப் வீரா் கெயில், பேட்டை தூக்கி வீசியதால் அவருடைய போட்டி ஊதியத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கெயில் 99 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜோஃப்ரா ஆா்ச்சா் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தாா். ஒரு ரன்னில் சதத்தை நழுவவிட்ட கெயில், விரக்தியின் உச்சத்துக்கு சென்றதோடு, தனது பேட்டையும் சுழற்றி ஆடுகளத்தில் வீசினாா்.
இதையடுத்து ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கெயிலுக்கு அவருடைய போட்டி ஊதியத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிா்வாகம் தெரிவித்துள்ளது.