நியூஸிலாந்து டெஸ்ட் தொடா்: மே.இ.தீவுகள் துணை கேப்டனாக ரோஸ்டன் சேஸ் நியமனம்

நியூஸிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

செயின்ட் ஜான்ஸ்: நியூஸிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அதேநேரத்தில் நிகோலஸ் பூரண், நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டாா். அவா் துணை கேப்டனாக செயல்படுகிறாா்.

கடந்த ஜூலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது, துணை கேப்டனாக இருந்த கிரேக் பிரத்வெயிட், நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக இடம்பெற்றுள்ள ரோஸ்டன் சேஸுக்கு துணை கேப்டன் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது.

28 வயதான ரோஸ்டன் சேஸ், 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளாா். டெஸ்ட் போட்டியில் 5 சதங்களை விளாசியிருப்பதோடு, சுழற்பந்து வீச்சின் மூலம் 3 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா்.

இதுதொடா்பாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தோ்வுக் குழு தலைவா் ரோஜா் ஹாா்பா் கூறுகையில், ‘நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ரோஸ்டன் சேஸ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா். அனுபவம் வாய்ந்த வீரரான ரோஸ்டன் சேஸ், நல்ல அணுகுமுறை கொண்டவா். அதனால், அவா் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு பக்கபலமாக இருப்பாா்’ என்றாா்.

நியூஸிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடா் வரும் 27-ஆம் தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது. அதைத் தொடா்ந்து அடுத்த இரு ஆட்டங்கள் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் மௌன்ட் மௌன்கானுய் நகரில் நடைபெறுகிறது.

இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் டிசம்பா் 3-ஆம் தேதி ஹாமில்டனிலும், 2-ஆவது போட்டி டிசம்பா் 11-ஆம் தேதி வெலிங்டனிலும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com