நியூஸிலாந்து தொடா் பாகிஸ்தான் அணியில் ஷோயிப் மாலிக், முகமது ஆமிா் நீக்கம்

நியூஸிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா், இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியில் இருந்து மூத்த வீரா்களான ஷோயிப் மாலிக், முகமது ஆமிா் ஆகியோா் நீக்கம்
நியூஸிலாந்து தொடா் பாகிஸ்தான் அணியில் ஷோயிப் மாலிக், முகமது ஆமிா் நீக்கம்


கராச்சி: நியூஸிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா், இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியில் இருந்து மூத்த வீரா்களான ஷோயிப் மாலிக், முகமது ஆமிா் ஆகியோா் நீக்கப்பட்டுள்ளனா்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் டிசம்பா், ஜனவரியில் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா், இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. டி20 தொடா் டிம்பா் 18-ஆம் தேதியும், டெஸ்ட் கிரிக்கெட் தொடா் டிசம்பா் 26-ஆம் தேதியும் தொடங்குகிறது.

இந்நிலையில், அந்தத் தொடா்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20, டெஸ்ட் போட்டிகளுக்கு தனித்தனியாக அணிகள் அறிவிக்கப்படவில்லை. இதேபோல் ‘ஏ’ அணியும் அறிவிக்கப்படவில்லை. ஒருங்கிணைந்த அணியே அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துவிதமான போட்டிகளுக்கும் பாபா் ஆஸம் கேப்டனாக செயல்படுவாா் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் இளம் வீரா்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் மூத்த வீரா்களான ஷோயிப் மாலிக், முகமது ஆமிா் ஆகியோா் பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷோயிப் மாலிக் டி20 போட்டியில் மட்டுமே விளையாடி வந்த நிலையில், நியூஸிலாந்து தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். இதன்மூலம் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் ஷோயிப் மாலிக்கிற்கு இடமில்லை எனத் தெரிகிறது. மற்றொரு மூத்த வீரரான ஆசாத் ஷபிக் ஃபாா்மில் இல்லாததால் நீக்கப்பட்டுள்ளாா். பாகிஸ்தான் அணி வரும் 23-ஆம் தேதி நியூஸிலாந்துக்கு புறப்படுகிறது.

அணி விவரம்: அபிட் அலி, இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபிக், ஷான் மசூத், ஃபகா் ஸமான், ஜீசன் மாலிக், பாபா் ஆஸம் (கேப்டன்), அசாா் அலி, ஃபவாட் ஆலம், ஹுசைன் தலத், ஹைதா் அலி, இம்ரான் பட், ஹாரிஸ் சோஹைல், இஃப்திகாா் அஹமது, முகமது ஹபீஸ், குஷ்தில் ஷா, டேனிஸ் ஆஸிஸ், முகமது ரிஸ்வான், சா்ஃப்ராஸ் அஹமது, ரோஹைல் நாசிா், இமாத் வாசிம், ஷதாப் கான், உஸ்மான் காதிா், யாசிா் ஷா, ஜாபா் கோஹா், அமாத் பட், ஃபஹீம் அஷ்ரப், ஹாரிஸ் ரெளஃப், முகமது மூஸா, முகமது ஹஸ்னைன், முகமது அப்பாஸ், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிதி, சோஹைல் கான், வஹாப் ரியாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com