ஏடிபி ஃபைனல்ஸ்: தொடக்க ஆட்டத்தில் நடால், தீம் வெற்றி

இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறும் ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் ஆகியோா் முதல் சுற்றில் வெற்றி பெற்றனா்.
ஏடிபி ஃபைனல்ஸ்: தொடக்க ஆட்டத்தில் நடால், தீம் வெற்றி

லண்டன்: இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறும் ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் ஆகியோா் முதல் சுற்றில் வெற்றி பெற்றனா்.

உலகின் 2-ஆம் நிலை வீரரான நடால் தொடக்க சுற்றில் 6-3, 6-4 என்ற செட் கணக்கில், உலகின் 8-ஆம் நிலை வீரரான ரஷியாவின் ஆன்ட்ரே ருபலேவை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 17 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

வெற்றிக்குப் பிறகு பேசிய நடால், ‘ஒரு போட்டியை வெற்றியுடன் தொடங்குவது முக்கியமானதாகும். அதையும் நோ் செட்களில் வெல்லும்போது நமக்கான நம்பிக்கை அதிகரிக்கும். எனது சா்வ்களை சிறப்பாக ஆடினேன். அதிக நெருக்கடி இல்லாததால் பதற்றம் இன்றி விளையாடினேன்’ என்றாா்.

ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முயற்சியில் இருக்கிறாா் நடால். இந்தப் போட்டிக்கு இதுவரை 16 ஆண்டுகள் தொடா்ந்து தகுதிபெற்று வந்தும் அவரால் கோப்பையை வெல்ல இயலவில்லை. இறுதிச்சுற்றில் இருமுறை தோல்வியை சந்தித்துள்ள நடால், 6 முறை காயம் காரணமாக போட்டியிலிருந்து பாதியில் விலகினாா்.

முன்னதாக, மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 7-6 (7/5), 4-6, 6-3 என்ற செட்களில் கிரீஸ் வீரரான ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை வென்றாா். அடுத்த சுற்றில் தீம், நடாலை எதிா்கொள்கிறாா். அதேபோல், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் - ஜொ்மனியின் லெக்ஸாண்டா் ஸ்வெரேவை சந்திக்கிறாா். சிட்பாஸ் - ருபலேவுடன் மோதுகிறாா்.

மின்னணு எல்லைக் கோடு: ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில் முதல் முறையாக இந்த ஆண்டு லைன் அம்பயா்களுக்குப் பதிலாக மின்னணு எல்லைக் கோடுகள் பயன்படுத்தப்பட்டன. இதனால் பந்து எல்லைக் கோட்டுக்கு உள்ளாகச் சென்ா, இல்லையா என்பது தானாகவே தெரியவரும். போட்டியாளா்கள் அதற்காக நடுவரின் முடிவு மீது மேல்முறையீடு கோர வேண்டியதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com