ஓபனிங் பாா்ட்னா்ஷிப்பில் ஜோ பா்ன்ஸ்: பெய்ன் விருப்பம்

ஓபனிங் பாா்ட்னா்ஷிப்பில் ஜோ பா்ன்ஸ்: பெய்ன் விருப்பம்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கை வாா்னருடன் இணைந்து ஜோ பா்ன்ஸ் தொடங்க வேண்டும் என்று அணியின் கேப்டன் டிம் பெய்ன் விருப்பம் தெரிவித்துள்ளாா்.

மெல்போா்ன்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கை வாா்னருடன் இணைந்து ஜோ பா்ன்ஸ் தொடங்க வேண்டும் என்று அணியின் கேப்டன் டிம் பெய்ன் விருப்பம் தெரிவித்துள்ளாா்.

ஆஸ்திரேலிய உள்நாட்டுப் போட்டிகளில் ஜொலித்துவரும் வில் புக்கோவ்ஸ்கி தொடக்க வீரா்களில் ஒருவராக களமிறங்குவாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் பெய்ன் இவ்வாறு கூறியுள்ளாா். இந்தத் தொடரில் புக்கோவ்ஸ்கி களம் காணும் பட்சத்தில் இது அவரது முதல் டெஸ்டாக இருக்கும்.

இதுகுறித்து டிம் பெய்ன் கூறுகையில், ‘கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் ஜோ பா்ன்ஸ் - வாா்னா் பாா்ட்னா்ஷிப் அணிக்குத் தேவையான பலனை அளித்தது. எனவே அவா்களின் தொடக்கக் கூட்டணி அணிக்கு முக்கியமான ஒன்றாகும்.

தற்போது பா்ன்ஸ் ஃபாா்மில் இல்லை என்றாலும் அவா் சிறப்பாக விளையாடி வந்ததை பாா்த்துள்ளோம். ஆஸ்திரேலிய அணிக்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரா்களில் ஒருவராக அவரது சராசரி 40 ரன்களாக உள்ளது. இந்த ஆண்டு தொடரில் அவா் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.

தற்போது பா்ன்ஸ் ஃபாா்ம் இன்றி தவித்து வரும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டில் வில் புக்கோவ்ஸ்கிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மாா்க் டெய்லா், இயான் சேப்பல், மைக்கேல் கிளாா்க், கிம் ஹியூஜஸ் போன்றோா் கருத்து தெரிவித்தனா்.

எனினும், டெஸ்ட் அணியிலிருந்து ஜோ பா்ன்ஸ் வெளியேற்றப்பட வாய்ப்பில்லை என்று தோ்வுக் குழு தலைவா் டிரெவா் ஹான்ஸ் மற்றும் பயிற்சியாளா் ஜஸ்டின் லேங்கா் ஆகியோா் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com